சுத்தமா ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே! ஆத்தாடி கீர்த்தி சுரேஷா இது!

தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினிமுருகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் கீர்த்திசுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய அளவில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடித்த நடிகையர்திலகம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பல பிரபலங்களும் இவருக்கு வாழ்த்து கூறினர்.


மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், விக்ரம், விஷால் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். மேலும் அவர் சர்க்கார் படத்திற்கு பிறகு நீண்ட ஓய்வில் இருந்தார். மேலும் தற்போது போனிகபூர் தயாரிக்கும் ஹிந்தி படம் ஒன்றில் நடிக்க உள்ளார். அதனைதொடர்ந்து தெலுங்கில் அறிமுக இயக்குனர் நரேந்திரநாத் என்பவர் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார்.


இந்நினையில் உடல்எடை அதிகரித்திருந்த கீர்த்திசுரேஷ் தற்போது உடல் எடை குறைந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் கீர்த்தி சுரேஷா இது என ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

Leave a Reply