நடிகர் ஈஸ்வர் பதில்! எனக்கும் மகாலட்சுமிக்கும் தொடர்பா?

முகாந்திரம் இல்லாமல் காவல்துறையினர் கைது செய்ததாகவும், நடிகை மகாலட்சுமியுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக தவறான வதந்தியை ஜெயஸ்ரீ பரப்பி வருவதாவும் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் குற்றம் சாட்டியுள்ளார்

பிரபல தொலைக்காட்சி தொடரான வம்சம் தொடரில் வில்லியாக நடித்து பிரபலமடைந்தவர் ஜெயஸ்ரீ. அதேபோல் ஆபிஸ் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர். அதைத் தொடர்ந்து அதேகண்கள், சிவரகசியம், நெஞ்சத்தை கிள்ளாதே, பாவமன்னிப்பு, சித்திரம் பேசுதடி என சுமார் 12-க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் திருவான்மியூர் காமராஜர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் நடிகை ஜெயஸ்ரீ அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அதில், தனது கணவர் ஈஸ்வர் அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு கொடுமைப்படுத்துவதாக கூறினார்.

மேலும், அவர் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் மகாலட்சுமியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறியிருக்கும் ஜெயஸ்ரீ, தனது நகைகள், 30 லட்சம் ரூபாய் வரையிலான பணத்தையும் ஈஸ்வர் அபகரித்துக் கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், குழந்தையுடன் தவித்து வருவதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஈஸ்வரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

தற்போது பிணையில் வெளியே வந்திருக்கும் நடிகர் ஈஸ்வர் தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நடிகை ஜெயஸ்ரீ அவரது முதல் கணவரிடம் ரூ.20 கோடி கேட்டு மிரட்டியுள்ளார்.

நான் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதாகவும் , குழந்தையிடம் தவறாக நடக்க முயற்சித்ததாகவும் அவர் கூறுவது முற்றிலும் பொய். குழந்தையின் எதிர்காலம் குறித்து ஜெயஸ்ரீக்கு கவலை இல்லை.

ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் என்னை போலீசார் மிரட்டி அழைத்துச் சென்று 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சின்னத்திரை நடிகை மகாலட்சுமியுடன் தொடர்பு இருப்பதாக என்னுடைய மனைவி அவதூறு பரப்புகிறார். வேண்டுமானால் என்னுடைய மனைவிக்கும் மகாலட்சுமியின் கணவருக்கும் இடையே நட்பிருக்கலாம்.

நடிகை மகாலட்சுமியின் கணவர் அனில் என்பவரது தூண்டுதலின்பேரில் தான் இந்த பிரச்னை நடக்கிறது’ என்றார். மேலும் தன்னுடைய வீட்டை பறித்து, தன் பெற்றோரை விரட்டி விட்டு அங்கு ஜெயஸ்ரீ குடியிருப்பதாகவும், பணம் பறிக்கும் நோக்கத்தில் தான் இப்போது புகார் அளித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Leave a Reply