அழகு குறிப்புகள்

முயன்று பாருங்கள்.. கரும் புள்ளிகளை அகற்றுவதற்கான வழிகள்!

நாம் பலரும் சரும அழகை மேம்படுத்த பல முயற்சிகளை எடுத்து கொண்டே இருக்கிறோம். அதில் தோற்றும் போயிருக்கோம்.

சரும துளைகளில் ஏற்படும் அடைப்பு மற்றும் இறந்த செல்கள் சருமத்தின் மேல் பகுதியில் படர்தல் போன்றவை கரும் புள்ளிகளுக்கு காரணமாகின்றன. அவை எளிதில் சருமத்தை விட்டு போவதில்லை.

அதனை கைகளால் கிள்ளும் போது அடுத்த இடங்களிலும் பரவுகிறது. கிள்ளிய இடத்தில தழும்புகள் தோன்றுகிறது. இவற்றை போக்கும் முறைகளை பற்றி பார்ப்போம். இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொன்டே கரும் புள்ளிகளை அகற்றுவதற்கான வழிகளை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். பணமும் நேரமும் மிச்சமாகும். பலனும் விரைவில் கிடைக்கும்.

செய்முறை:
1 ஸ்பூன் பட்டை தூள் மற்றும் 1 ஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து, முகத்தில் மெல்லிய படலமாக தடவவும்.
tuitui
ஒரு காட்டன் துணியை எடுத்து மென்மையாக முகத்தில் அழுத்தவும்.

10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்.பின்பு துணியை எடுத்துவிட்டு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

சருமத்தை இறுக்கமாக மாற்ற முட்டை மாஸ்க் நல்லது. முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்றி மேலும் கரும்புள்ளிகள் ஏற்படாமல் தடுக்கிறது.

முட்டையில் உள்ள புரதச்சத்தும் மற்ற மினரல்களும் சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் பாதுகாக்கின்றன.

முட்டையை உடைத்து வெள்ளை கருவை மட்டும் எடுத்து கொள்ளவும்.

வெள்ளை கருவை உங்கள் முகத்தில் தடவவும்.நன்றாக காய விட்டு, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நேரில் முகத்தை கழுவவும்.

முட்டையுடன் தேன் அல்லது எலுமிச்சை சாறும் சேர்த்து
கொள்ளலாம்.

க்ரீன் டீயும் கரும்புள்ளிகளை நீக்க வல்லமை கொண்டவை. சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button