ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா குழந்தை அதிக எடையுடன் பிறக்க என்ன காரணங்கள்..!

கர்ப்பம் பற்றிய பொதுவான விஷயங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். அவற்றுள் ஒன்று தான் கர்ப்ப கால குழந்தையின் எடை. அதாவது கர்ப்பிணி பெண்கள் நல்ல ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு குழந்தையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். ஒருவேளை குழந்தையின் வளர்ச்சி நினைத்ததை விட பல மடங்கு பெருகி காணப்பட்டால் என்ன செய்வது? வாருங்கள் என்னுடன் சேர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

வல்லுனர்களின் கருத்துப்படி குழந்தையின் எடையானது பொதுவாக 2500 கிராம் முதல் 5000 கிராம் வரை இருக்கக்கூடும். எந்த குழந்தையின் எடையாவது 5000 கிராமை கடந்து காணப்படுமெனில் குழந்தை பெரிதாய் பிறக்க வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், குழந்தை குண்டாக பிறப்பதால் ஆரோக்கியம் அற்று இருக்கக்கூடும் என அர்த்தமில்லை. இதனால் பிரசவத்தின் போதும் நீங்கள் ஒன்றும் பெரிய சிக்கல்களை சந்திப்பதுமில்லை.

கர்ப்பிணிகள் உடல் எடை பொறுத்து குழந்தையின் எடை அமையுமா?

உங்கள் உணவு முறை பொறுத்தே குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் அளவு என்பது அமைகிறது. ஆனால் நீங்கள் உண்ணும் உணவின் தரம் மற்றும் எடுத்துக்கொள்ளும் அளவை பொறுத்து குழந்தைகள் குண்டாக பிறப்பதில்லை.

1. ஒரு ஆய்வின்படி தெரியவருவது என்னவென்றால், உங்கள் எடையானது 23 பவுண்டிற்கும் அதிகமாக இருக்கும்போது 8.8 பவுண்ட் அளவுக்கு அதிகமாக குழந்தை எடையுடன் பிறக்க வாய்ப்பிருக்கிறதாம்.

2. அதேபோல் அம்மாக்களின் எடை 44 முதல் 49 பவுண்ட் இருக்கும்போது குழந்தைகளின் எடை இருமடங்கு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

1. நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவில் கவனம் தேவை.

2. எண்ணெய் அதிகம் அடங்கிய உணவையும் ஜங்க் (Junk) உணவையும் தவிர்க்க வேண்டும்.

3. உங்கள் வயிறு சிறியதாக இருப்பின் சத்துள்ள உணவை மருத்துவரின் பரிந்துரையுடன் அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள்.

எதனால் குழந்தை குண்டாக பிறக்கிறது?

1. இரத்த சர்க்கரை அளவு பொறுத்து குழந்தையின் எடை என்பது அதிகரித்து காணப்படுகிறது.

2. அம்மாக்களின் வயது பொறுத்து குழந்தையின் எடை அதிகம் காணப்படுகிறது.

3. உங்களுக்கு இருதய நோய், நீரிழிவு நோய் மற்றும் இரத்த சோகை இருக்கும்போது குழந்தை குண்டாக பிறக்க வாய்ப்பிருக்கிறது.

4. ஒரு ஆண் மற்றும் பெண்ணின் மரபு மாற்றங்களை பொருத்தும் குழந்தை குண்டாக பிறக்கிறது.-Source: maalaimalar

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button