அசைவ வகைகள்அறுசுவை

இதை முயன்று பாருங்கள்… மார்பு சளியைப் போக்கும் நண்டு தொக்கு..

கொஞ்சம் மிளகு தூக்கலாகப் போட்டு செய்யப்படும் நண்டுத் தொக்கு நெஞ்சுச் சளி,இருமல் எல்லாவற்றுக்கும் ஏற்ற மருந்து.செயவதும் சுலபம்.வாருங்கள்!

ctghj

என்னென்ன தேவை:

சுத்தம் செய்யப்பட்ட கடல் நண்டு ½ கிலோ
பெரிய வெங்காயம் 2
தக்காளி 2
பச்சை மிளகாய் 2
இஞ்சிப்பூண்டு விழுது 1 டீஸ்பூன்
உப்பு
கடலை எண்ணெய் 1 குழிக்கரண்டி
மஞ்சள்தூள் ½ ஸ்பூன்
மல்லித்தூள் 2 ஸ்பூன்
மிளகாய்தூள் 1 ஸ்பூன்
மிளகுத்தூள் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை
cvytyu
எப்படிச் செய்வது:

வட சட்டியை அடுப்பில் வைத்து அது சூடானதும் எண்ணெயை ஊற்றி முதலில் இஞ்சிப்பூண்டு விழுதை போட்டு அத்துடன் பச்சை மிளகாய்களை ஒடித்துப் போடவும்,பச்சை வாசனை போனதும் வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்த்து கொஞ்சம் உப்புச் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பொன்னிறம் அடைந்ததும், தக்காளி சேர்த்து வதக்கவும்.இரண்டும் நன்றாக குழைவாக வெந்ததும் பொடிகளைப் போட்டு கிளறுங்கள்.இப்போது உங்கள் ருசிக்கேற்றபடி உப்புச் சேர்த்து மறுபடியும் கிளறிவிட்டு சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டுத் துண்டுகளை அள்ளிப்போட்டு கிளறி விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மூடிவைத்து வேக விடுங்கள்.நண்டில் இருந்து வெளிப்படும் நீங்கள் ஊற்றிய நீரும் வற்றியதும் ஒரு முறை கிளறிவிட்டு அரைமணி நேரம் மூடி வைத்திருந்து பிறகு சாப்பிடுங்கள்.
cchgjh

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button