32.5 C
Chennai
Sunday, May 19, 2024
ewfe
ஆரோக்கியம் குறிப்புகள்

வீட்டு வைத்தியம்: அல்சர் (ulcer) நோயால் தினமும் அல்லல்படுபவர்களுக்கு இந்த இயற்கை வைத்தியம்

குறிப்பாக இன்றைய சமுதாயத்தினருக்கு அதிகமாக ஏற்பட கூடிய ஒரு பிரச்சனையாக அல்சர் (ulcer) இருக்கிறது.

அல்சர் வருவதற்கான காரணங்கள்:-
அல்சர் நோய் வருவதற்கு முதல் காரணம் என்னவென்றால் காலதாமதமாக உணவருந்துதல், முறையற்ற உணவு முறை, கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் உணவுகளை அதிகளவு உட்கொள்வது போன்ற காரணங்களால் இந்த அல்சர் பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த அல்சர் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக நம் பாட்டி வைத்தியம் சிறந்து விளங்குகிறது.

மணத்தக்காளி கீரை:

அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் வாரத்தில் மூன்று முறையாவது இந்த மணத்தக்காளி கீரையை சூப்பாகவோ அல்லது பொறியலாகவோ உட்கொண்டு வந்தால் குடல் புண், வயிற்று புண், அல்சர் மற்றும் வாய்புண் போன்றவற்றை சரி செய்யும்.
ewfe
அல்சர் முற்றிலும் குணமாக – பச்சை வாழைப்பழம்:
green bananas isolated on white background with clipping path

அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் பச்சை வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வர, வயிற்று குடல்களில் பழுதுபட்ட மெல்லிய ஜவ்வு தோள்களை வளர செய்யும், இதனால் அல்சர் நோயை (ulcer) சரி செய்ய உதவுகிறது.

அல்சர் முற்றிலும் குணமாக – தேங்காய் பால்:

அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் தினமும் தேங்காய் பாலை உணவில் சேர்த்து கொள்ளலாம் அல்லது தேங்காய் பாலை மட்டும் அருந்தி வர வயிற்று புண், குடல் புண், வாய் புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மிகவும் உதவுகிறது.

தேங்காய் பால் பிடிக்காதவர்கள் தினமும் சிறிதளவு கொப்பரை தேங்காயை மட்டும் உட்கொண்டு வந்தால் போதும், அல்சர் பிரச்சனை சரியாகும்.

அல்சர் முற்றிலும் குணமாக – ஆப்பிள் ஜூஸ்:

அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் (ulcer treatment in tamil), வீட்டில் இருந்து தயார் செய்த ஆப்பிள் ஜூஸை தினமும் அருந்தி வந்தால், அல்சரினால் ஏற்படும் வயிற்று வலியை சரி செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த ஆப்பிள் ஜூஸை கடைகளில் வாங்கி அருந்த கூடாது, வீட்டில் தயார் செய்து மட்டும் அருந்தவும்.

பாகற்காய்:

அல்சர் குணமாக வீட்டு வைத்தியம், பழுத்த பாகற்காயை தினமும் சமைத்து உண்டு வர, வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்வதுடன், குடலுக்கு வலிமை அளிக்கிறது. மேலும் பித்தத்தையும் தணிக்கிறது.

வேப்பிலை:

அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வேப்பிலையை சாப்பிட்டு வர, அல்சரை சரி செய்வதுடன், வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.

தண்டு கீரை:

அல்சர் குணமாக வீட்டு வைத்தியம், தண்டு கீரையில் இரும்பு சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகளவு நிறைந்துள்ளதால், இவற்றை தினமும் உணவில் சேர்த்து வர உடலானது குளிர்ச்சி அடைந்து மூல நோய் மற்றும் குடல் புண் சரியாகிறது.

முட்டை கோஸ்:

அல்சர் குணமாக பாட்டி வைத்தியம் தினமும் முட்டை கோஸ் சாப்பிட்டு வர அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும்.

அகத்திக்கீரை:

அல்சர் குணமாக வீட்டு வைத்தியம், அகத்திக்கீரை சிறந்த மருந்தாக விளங்குகிறது.

எனவே தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சாப்பிட்டு வர அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும். அகத்திக்கீரையை சூப் செய்து கூட குடிக்கலாம்.

புழுங்கல் அரிசி கஞ்சி:

அல்சர் குணமாக பாட்டி வைத்தியம், தினமும் புழுங்கல் அரிசி கஞ்சி ஒரு டம்ளர் அருந்தி வர, அல்சர் பிரச்சனையை சரி செய்து விட முடியும்.

துளசி:

அல்சர் குணமாக வைத்தியம், துளசி இலை சாறுடன் சிறிதளவு மாசிக்காயை சேர்த்து வாரத்தில் இரண்டு முறை அருந்தி வர, குடல் புண், வாய் புண் போன்றவை சரியாகும்.

கால் விரல் சொத்தை விழுவதன் காரணம், சொத்தை நகத்தை குணப்படுத்தும் முறை !!!

நெல்லிக்காய்:

அல்சர் குணமாக பாட்டி வைத்தியம், அல்சரை சரி செய்வதற்கு மற்றொரு சிறந்த மருந்து, நெல்லிக்காய்.

எனவே தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வர அல்லது ஜூஸ் செய்து அதனுடன் தயிர் கலந்து அருந்தி வர அல்சர் பிரச்சனையை சரி செய்திட இயலும்.

அத்திமரம் பட்டை:

அல்சர் குணமாக வைத்தியம் அத்திமரம் பட்டை சாறுடன் சம அளவு பசும் பால் மற்றும் சிறிதளவு கல்கண்டு சேர்த்து 100 மில்லி அளவு தினமும் அருந்தி வந்தால் அல்சர் பிரச்சனையை சரி செய்திட முடியும்.

அத்தியிலை:

அல்சர் குணமாக பாட்டி வைத்தியம், அத்தியிலை சாறுடன், சம அளவு வேப்பிலை சாறு சேர்த்து தண்ணீர் கலந்து காய்ச்சி தினமும் அருந்தி வர வயிற்று புண், குடல் புண், வாய் புண் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

சீரகம்:

அல்சர் பிரச்சனையை சரி செய்வதற்கு சீரகம், அதிமதுரம், தென்னம்பாளை பூ மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பசும்பால் சேர்த்து அரைத்து சிறிய எலுமிச்சை அளவிற்கு எடுத்துக்கொள்ளவும்.

பின்பு இவற்றை பாலில் கலந்து தினமும் அருந்தி வர அல்சர் பிரச்சனை குணமாகும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகள் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.

Related posts

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வயதானவர்கள் செய்ய வேண்டியவை!

nathan

இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைக்க நினைத்தால் இதனை அடிக்கடி எடுத்துக்கோங்க…!!!சூப்பரா பலன் தரும்!!

nathan

சில்லி பேபி கார்ன்

nathan

குழந்தைகளுக்கு டையபர் பயன்படுத்துவதால் ஏற்படும் அரிப்பை தடுக்கும் இயற்கை வழிகள்

nathan

அடிக்கடி வரும் ஏப்பம்: கட்டுப்படுத்த எளிய வழிகள்

nathan

உடலுக்கு அவசியமான 5 உணவுப்பொருட்கள்

nathan

தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை சிறுநீரில் கல் வர காரணங்கள்,,,

nathan

காது குடைய பென்சில், பேனா, பேப்பர், பட்ஸ் பயன்படுத்தறீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

ஆ… அலுமினியம்…அபாயம்!01 Sep 2015

nathan