ஆரோக்கியம் குறிப்புகள்

மல்லிகைப் பூ அழகிற்காக மட்டுமல்ல பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது!

மல்லிகைப் பூவின் வாசனையில் மயங்காதவர்கள் யாருமில்லை. அதன் வாசம் மனதை அமைதிப்படுத்தும். இந்த பூவின் வாசனையைப் போலவே பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள் :

சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்கு மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி குடித்து வந்தால் போதும். குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.

140790009a6c986558c279994763a84eb80ba916e 1667612290

மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும்.

பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு நீங்கும்.

மல்லிகைப் பூ ஒன்றிரண்டு தினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

தாய்ப்பால் நிறுத்தவும், அதனால் உண்டாகும் வலியையும் வீக்கத்தினையும் குறைக்க, மல்லிக்கைப்பூ செண்டை மார்பில் சுற்றி இரவு முழுவதும் வைத்தால், தாய்ப்பால் சுரப்பது நின்று போகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button