அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகத்திற்கு வீட்டில் செய்யக்கூடிய மசாஜ்

 

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சோர்ந்துபோன தசைகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கவும் மசாஜ் உதவும். முகத்தை மசாஜ் செய்ய நீங்கள் பார்லருக்குத் தான் போக வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.

முகத்திலிருக்கும் உயிரற்றுப்போன அணுக்களை நீக்கவும், முகத்தில் கண், மூக்கு, உதடு போன்ற மிருதுவான பகுதிகள் இருப்பதால் முகத்துகு மசாஜ் செய்ய கூடுதல் கவனம் தேவை. கண்கள் தவிர பிற பகுதிகளுக்கு கீழிருந்து மேல்புறமாகத்தான் மசாஜ் செய்யவேண்டும். கண்களுக்கு மட்டும் அதை சுற்றியுள்ள பகுதியில் வட்டமாக மசாஜ் செய்ய வேண்டும்.

முகம் மொத்தமாக சேர்த்து 20 நிமிடம் வரை மசாஜ் செய்யலாம். மாதத்துக்கு ஒருமுறையாவது மசாஜ் செய்யுங்கள். பஞ்சில் கிலென்சிஸ் மிக் அல்லது தயிர் தோய்த்து தடவி முகத்தை சுத்தப்படுத்துங்கள் பேன்ஸி கடைகளில் பல்வேறு பிரண்ட்களில் (Brand) நரிஸிங் க்ரீம் கிடைக்கிறது. உங்களுக்கு பொருந்தும் க்ரீமை தேர்ந்தெடுத்து வாங்குங்கள்.

பால், ஏடு, வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றையும் உபயோகித்து மசாஜ் செய்யலாம். நரிஷிங் க்ரீமை முகம் முழுக்க பரவவிட்டு தடவிக்கொள்ளுங்கள். கழுத்தில் தொடங்கி கன்னம், தாடை, கண், மூக்கு என்று ஒவ்வொரு பகுதிக்கும் நேரம் ஒதுக்கி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பகுதியையும் நான்கிலிருந்து ஆறு தடவை செய்யலாம். மசாஜ் செய்து முடித்ததும் ஒரு கைகளாலும் கன்னத்தை லேசாக தட்டுங்கள். (சதை மேல் நோக்கி அழுத்துபடி தட்ட வேண்டும்.) பிறகு இரு கைகளால் முகத்தை சிறிது நேரம் மூடிக் கொள்ளுங்கள். நம் தோலுக்கு ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ளுங்கள்.

நம் தோலுக்கு ஊட்டங்களை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையிருப்பதால் நரிஷிங் க்ரீம், பாலேடு போன்றவற்றிலிருக்கும் ஊட்டங்களை எளிதில் உறிஞ்சிக் கொள்ளும். எல்லாம் செய்த பிறகு வெதுவெதுப்பான நீரில் நனைத்த துண்டால் முகத்தை துடையுங்கள். பிறகு பேஸ் ஸ்கிரப் அல்லது அரிசிமாவை பால் கலந்து பேஸ்டாக்கி முகத்தில் ஐந்து நிமிடங்கள் வரை தேய்க்க வேண்டும்.

பின் மூக்கின் ஓரங்களில் இருக்கும் பிளாக் ஹெட்களை அதற்கான உபகரணம் பயன்படுத்தி நீக்க வேண்டும். ஆழமாக இருக்கும் பிளாக் ஹெட்களை நீக்கும் முயற்சி வேண்டாம் வேறுவிதமான பாதிப்புகளை உருவாக்கிவிடும். அதற்கு அழகுக் கலை நிபுணரைத்தான் அணுக வேண்டும்.

மேற்சொன்ன மசாஜ் முறைகள் உலர்ந்த மற்றும் சாதாரண சருமத்தினருக்கு மட்டும்தான் பொருந்தும். முகத்தில் பரு இருக்கும் பெண்கள் சுயமாக மசாஜ் செய்யக்கூடாது. எல்லாம் முடிந்த பிறகு முகத்தில் முல்தானி மெட்டியில் சிறிது பால் குழைத்து பேஸ்பேக் தடவி உலர விடுங்கள்.

பத்து நிமிடம் போன பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவிவிடவும். சருமம் மினுமினுப்பதைக் கண்டு பூரித்துப் போவீர்கள்.201612070952137069 simple home facial SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button