தேவையான பொருட்கள்:
கெட்டியான பால் – 1 லிட்டர்
தயிர் உரை – சிறிதளவு
செய்முறை விளக்கம்: பாலை தண்ணீர் சேர்க்காமல் காய்க்கவும். பிறகு நன்கு ஆறவிடவும். ஆறிய பிறகு குளிர்சாதன பெட்டியில் வைத்துக்கொள்ளவும். அடுத்தநாள் அதை எடுக்கும்போது கட்டியான ஆடை மேலே நிற்கும்.
அந்த ஆடையை எடுத்து ஒரு காற்று போகாத பாத்திரத்தில் போட்டு பிரீஸரில் வைக்கவும். இப்படியாக ஒரு மாதம் செய்து வரவும். ஒரு மாதத்திற்கு பிறகு அந்த ஆடைகளை எடுத்து வெளியில் வைத்து குளிர் போன பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஆடைகளை போட்டு குளிர்ந்த தண்ணீர் ஊற்றி ஓட விடவும். வெண்ணெய் திரண்டு மேலே வரும். இந்த வெண்ணெய்களை சேர்த்து ஒரு பாத்திரத்தை அடுப்பில வைத்து இந்த வெண்ணெய்களை அதில் போட்டு உருக்கி கருகவிடாமல் கவனமாக முருங்கை இலைகளை குறிப்பிட்ட நேரத்தில் சேர்க்கவும். சுத்தமான சுவையான வீட்டு நெய் தயார்.