ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா பிரசவிக்கும் போது குழந்தையின் தலை கீழ் நோக்கி வருவது எப்படி தெரியுமா?

பெண்களுக்கு குழந்தை பிறப்பு என்பது கடவுள் தந்த மிகப்பெரிய கொடை ஆகும்.

குழந்தை பெண்ணின் வயிற்றில் உருவாக்கி வளர்வது எத்தகைய அதிசயம் என்பதை அதை வாழ்க்கையில் உணர்ந்து பார்க்கும் பெண்ணிற்கு மட்டும் தான் புரியும்.

அந்தவகையில் இயற்கையாக சாதாரண முறையில், பெண்ணின் யோனியூடாக குழந்தையானது வெளியேற முடியாத நிலை ஏற்படும்போது, வேறு கருவிகள் கொண்டு வெளியே இழுத்து எடுப்பதன் மூலமோ, அல்லது வயிற்றில் வெட்டு ஒன்றை ஏற்படுத்தி அறுவைச் சிகிச்சையின் மூலமோ குழந்தை செயற்கையாக பெண்ணின் கருப்பையிருந்து வெளியேற்றப்படுவது உண்டு.

அந்தவகையில் ஒரு குழந்தை பிறக்கும் போது தானாகவே குழந்தை தலை கீழாக மாறிவிடுகின்றது.

இது பொதுவாக கர்ப்பிணிகளின் 28 மற்றும் 32-வது வாரங்களில் பிறவா குழந்தையின் தலையானது கீழ் நோக்கி வருகிறது.

இது பிரசவிக்கும் சில நிமிடங்களுக்கு முன்பு சில குழந்தைகளுக்கு தெரியவர, தானாகவே அவர்கள் தன் தலையை கீழ் நோக்கி கொண்டு வருகின்றனர்.

பிரசவத்தின் போது குழந்தையானது இடுப்பு எலும்புகள் நோக்கி நகர்கின்றனர்.

சிக்கலற்ற சுகப்பிரசவத்தை முன்புற முதுகெலும்பு நிலை என அழைக்கப்படுகின்றது.

ஏனெனில் குழந்தையின் தலை கீழ் நோக்கியும், உடம்பு அம்மாவின் பின்புறம் பார்த்தவாறும் இருக்கும். இது தான் குழந்தை பிறப்புக்கான சரியான நிலையாகும்.

பொதுவாக குழந்தைகள், கர்ப்ப காலத்தின் 30ஆவது வாரத்தில் இந்த நிலைக்கு வருவார்கள். ஆனால் ஒரு சில சமயத்தில் 36ஆவது வாரம் வரை குழந்தைகள் இந்த நிலைக்கு வருவதில்லை.

இதற்கு தலையணையை பின்பக்கமாக வைத்து உட்கார்ந்து கொள்ளலாம். வெகு நேரத்துக்கு உட்கார்ந்திருப்பதை தவிர்த்து கொள்வது நல்லது.

அதுமட்டுமின்றி மருத்துவரின் ஆலோசனை படி பிறப்பு பந்து என்பதைக்கொண்டு நீங்கள் பயிற்சி எடுக்கலாம்.

ஒருவேளை குழந்தையின் தலை, தலைக்கீழ் நிலையில் காணப்படாவிட்டால்., சி பிரிவின் மூலமாக குழந்தையை பெற்றுக்கொள்ளலாம்.

ஒருவேளை குழந்தை தலை கீழ் நோக்கி இல்லாவிட்டாலும் சுக பிரசவத்திற்கான வாய்ப்பு இருக்கிறது என சொல்லப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button