சரும பராமரிப்பு

வெயில் காலத்தில் சருமம் நிறம் மாறுவதை தடுக்க

வெயில் காலத்தில் சருமம் நிறம் மாறுவதை தடுக்க
மெயில் கோடை வெயில் நம்மை சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. அழகாக பராமரித்து வந்த சருமத்தின் நிறமும் மாற ஆரம்பித்துவிட்டது. அதுமட்டுமல்லாமல் சரும பிரச்சனைகளும் அதிகரித்துவிட்டது. பொதுவாக கோடை வந்துவிட்டால், சருமத்தின் நிறம் கருமையாகி, பொலிவு இழந்து, பிம்பிள் வர ஆரம்பிக்கும். கோடையில் சருமத்தை முறையாக பராமரித்து வந்தால், சருமத்தின் அழகு பாதுகாக்கப்படுவதோடு, சருமமும் மென்மையாக, வறட்சியின்றி பொலிவோடு காணப்படும்.• 4 டேபிள் ஸ்பூன் பால், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, சருமத்தில் வெயில் படும் இடத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையானது எண்ணெய் பசை சருமத்திற்கு சிறந்தது. மேலும் இதனை வாரம் மூன்று முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.• 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 3 புதினா இலைகள், சிறிது தயிர் சேர்த்து கலந்து, அதனை நன்கு பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி வட்ட வடிவில் 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அனைத்து அழுக்குகளும் வெளியேறிவிடும். வெயில் காலத்தில் சருமம் கருமை அடைவதை தடுக்கும்.

• சருமத்தில் உள்ள கருமையை போக்கி, சருமத்தின் பொலிவை அதிகரிக்க வேண்டுமானால், அரைத்த அன்னாசி பழம், கிரேப் சீடு எண்ணெய், அரைத்த பப்பாளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு 20 நிமிடம் உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்யலாம். அல்லது ஒருநாள் விட்டு ஒரு நாள் செய்யலாம். விரைவில் எதிர்பார்த்த பலனை தரக்கூடியது  இந்த பேஸ் பேக்.

• சிலருக்கு கோடையில் பிம்பிள வர ஆரம்பிக்கும். அத்தகையவர்கள் 4 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பவுடர், புதினா இலைகள் மற்றும் துளசி இலைகள் சேர்த்து கலந்து, அதனை சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், உடலில் உள்ள வெப்பம் வெளியேற்றப்பட்டு, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பாக்டீரியாக்கள் நீக்கப்பட்டு, சருமம் பொலிவோடு இருக்கும்.

Related posts

அழகுக் கட்டுரைகள் – அழகு உள்ளப் பயிற்சி & உடற்பயிற்சி & அழகு ஒப்பனை முறைகள்

nathan

சருமமே சகலமும்!

nathan

சருமப் பொலிவுக்கு கைகொடுக்கும் இயற்கையான ஸ்கரப்க

nathan

பீட்ரூட் நமது உதட்டுக்கும் நன்மை செய்கிறது என்றால் நம்புவீர்களா?

nathan

உட்காரும் இடத்தில் பருப் பிரச்சனையா? உடனே தீர்வு காண இதை படிங்க!

nathan

இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிட சூப்பர் டிப்ஸ்!….

sangika

அழகை பாதுகாக்கும் விட்டமின்கள் எவையென தெரிய வேண்டுமா?

nathan

முதல் முறையாக பார்லர் போகும் போது..

nathan

தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு தரும் வேப்ப எண்ணெய்

nathan