இளமையாக இருக்க

சூப்பர் டிப்ஸ்! எந்த நாளில் என்ன கலர் சட்டை அணியலாம்?!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நாளாக இருக்கிறது. அதனால் அந்த தெய்வத்திற்கு பிடித்த நிறங்களில் உடை அணிவது நன்மை பயக்கும்.

கருப்பு சட்டை என்பது பொதுவாக எதிர்ப்பை காட்டும் வண்ணம் குறிக்கப்படுவதால் அதனை பெரும்பாலும் விசேஷ விழாக்களில் தவிர்ப்பது நல்லது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது. அதனால் அந்த தெய்வத்திற்கு பிடித்த நிற உடையை அணிந்து கொண்டால், அன்றைய நாள் நமக்கு மிகவும் உகந்த நாளாக அமைந்துவிடும். கருப்பு என்பது நம்பிக்கை. சிறு வயது முதலே பெரியவர்கள் கருப்பு நிற உடையை அணிய கூடாது என கூறி வருவர்.

166000431b1a3287cecd263eb94e5423790d873822083039441676346158

அதற்கு காரணம் கருப்பு என்பது எதிர்ப்பை குறிக்கும் வண்ணம் என கருதப்படுகிறது.

அதனை சுபவிழாக்களில் அணிந்து செல்லும்போது அந்த சுபவிழாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போலவும், அந்த விழாவில் எதிர்மறையான எண்ணங்களை விதைப்பது போலவும் அமைந்து விடுகிறது. அதனால், தான் கருப்பு உடை என்பது சுப விழாக்களில் அணிந்து செல்லக்கூடாது என கூறி வருகின்றனர்.

இருந்தாலும் சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு உகந்த நிறம் கருப்பு என்பதால் அந்நாளில் இந்த கருப்பு நிற சட்டையை அணியலாம். அது நமக்கு நன்மை பயக்கும். இப்படி ஒவ்வொரு நாளும் என்ன நிற சட்டையை அணியலாம் என்பதை தற்போது பார்க்கலாம்.

திங்கட்கிழமைகளில் சந்திரனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய நாளில் வெள்ளை நிற உடை அணிவதால் நமக்கு நன்மைகள் உண்டாகும். நாம் செய்யப்போகும் காரியம் தடையில்லாமல் நிறைவேறும். அடுத்து செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு மிகவும் உகந்த நாள். இந்நாளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற உடை அணிவது நமக்கு நல்ல பலனை தரும். தாமதமின்றி காரியங்கள் நிறைவேறும்.

புதன்கிழமை விநாயகருக்கு உகந்த நாள் அன்றைய நாள் பச்சை உடை அணிவது நல்லது. மகிழ்ச்சியான நாளாக மாற்றிவிடும். மேலும், நம் மனது சமாதானமாக இருக்கும்.

வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள். அன்னாளில் மஞ்சள் நிறம் கொண்ட உடை அணிவது நமக்கு நல்ல பலனை அளிக்கும். மஞ்சள் நிற உடை நாம் செய்யும் செயல்களை தடையில்லாமல் நடை பெற செய்ய உதவும்.

வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உகந்த நாள். அந்நாளில் சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய நிறங்களில் உடை அணியலாம். அண்ணாவின் கோவிலுக்கு செல்வது மிகவும் நல்ல பலனை தரும். விளக்கேற்றி வழிபடுவது நம்மை சுற்றியுள்ள தீய சக்திகளை விலக்கி சிறப்பான வாழ்க்கை அமையும்.

சனிக்கிழமை சனிபகவானுக்கு உகந்த நாள். அன்றைய நாள் கருப்பு அல்லது கருநீலம் போன்ற நிறத்தில் உடைகள் அணியலாம். சனிபகவான் மனச்சோர்வினை தவிர்த்து வாழ வழிவகை செய்வார்.

ஞாயிற்று கிழமைகளில் சூரியனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய நாளில் மஞ்சள் நிற உடை அணியலாம். அப்படி அணிந்தால் எதிரி பயம் நீங்கி மன அமைதி பெறும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button