773139133249ca1a202c0ea0bd54ff0f055e92521990898578733457557
வீட்டுக்குறிப்புக்கள்

உங்களுக்கு தெரியுமா கல் உப்பு பரிகாரம் செய்வதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டாகும்?

நாம் எவ்வளவு தான் நல்லவர்களாக வாழ்ந்தாலும் சில தீமைகள் நம்மை பாதிக்கவே செய்கின்றன. கண்களால் காண முடியாத துர்சக்திகளை அழித்து, நமக்கு நன்மையை அளிக்கும் சக்தி நாம் உணவிற்கு பயன்படுத்தும் ‘உப்பு’ பெற்றிருக்கிறது. இந்த உப்பை கொண்டு செய்யப்படும் பரிகாரம் என்னவென்று பார்ப்போம்.

உப்பு பரிகாரம் ஒரு சிறு கிண்ணத்தில் நிறைய சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை போட்டு நிரப்பி, உங்கள் வீட்டு குளியலறையில் நீர் படாத ஒரு மூலையில் வைக்க வேண்டும். உப்பு கரைய, கரைய மீண்டும் உப்பை நிறைத்து கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த வீட்டில் இருப்பவர்களை அண்டியிருக்கும் தரித்திரம் நீங்கும்.

கழிவறை, குளியலறை சேர்த்து கட்டப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள், அந்த அறையின் குளிக்கும் இடம் பகுதியில் தண்ணீர் படாத இடத்தில் இந்த உப்பு கிண்ணத்தை வைக்க வேண்டும்.

773139133249ca1a202c0ea0bd54ff0f055e92521990898578733457557

வாரத்தில் ஒரு நாள் வீடுகளை கழுவி சுத்தப்படுத்தும் போது, தண்ணீரில் சிறிது கல்லுப்பை சேர்த்து கரைத்து வீட்டை சுத்தப்படுத்தி வந்தால். வீட்டில் நிறைந்திருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி வீட்டில் நன்மைகள் பெருக தொடங்கும். உங்கள் பணம் வைக்கும் பர்ஸ், பணப்பை போன்றவற்றில் சில கல்லுப்பை போட்டு வைப்பதால் செல்வத்தை அதிகம் ஈர்க்கும்.

கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள், மனவருத்தங்கள் ஏற்பட்டிருக்கும் போது, ஒரு கிண்ணத்தில் கல்லுப்பை நிறைத்து, தம்பதிகள் உறங்கும் படுக்கை அறையின் ஒரு ஓரத்தில் வைப்பதால் கணவன் மனைவிக்கிடையே இருக்கும் பிரச்சனை கூடிய விரைவில் தீர்ந்து ஒற்றுமையாக வாழ்வார்கள்.

நீங்கள் பயன்படுத்தும் வாகனங்களை கழுவும் போது, தண்ணீரில் சிறிது கல்லுப்பை போட்டு கரைத்து, அந்நீரைக் கொண்டு உங்களின் வாகனங்களை சுத்தப்படுத்தினால், அதில் நிறைந்திருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கும். அடிக்கடி வாகனங்கள் பழுதடைவது குறையும். எதிர்பாரா விபத்துகள் ஏற்படாமல் காக்கும். வாரம் ஒருமுறையாவது குளிக்கும் நீரில் கல்லுப்பை போட்டு கரைத்து குளித்து வந்தால் உங்கள் உடல் மற்றும் மனதில் நிறைந்திருக்கும் எதிர்மறை அதிர்வுகள் நீங்கும்.

Related posts

மீன் குழம்பு ஆஹா ஓஹோவென இருக்க… மீன் மசாலா பொடி… வீட்டிலேயே அரைத்து வைத்துக்கொள்ள டிப்ஸ்..!

nathan

முயன்று பாருங்கள் இந்த இயற்கை சாம்பிராணி உங்க வீட்ல வச்சா டெங்கு வராது தெரியுமா!!

nathan

டெலிவிஷன் எது ரைட் சாய்ஸ்?

nathan

கொசுவர்த்திகளும் வாசனை திரவியங்களும் தவிர்க்க முடியாத நிலைமையில் நாம் என்ன செய்ய வேண்டும்?….

sangika

டிப்ஸ்! எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷாக இருக்கும்?

nathan

வீட்டில் எந்தெந்த பொருட்களை எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?வாஸ்து சாஸ்திரம் செல்வது என்ன ?

nathan

சூப்பர் டிப்ஸ்.. சமையலுக்கு பயன்படுத்தக்கூடாத எண்ணெய் எதுவென்று தெரியுமா ?

nathan

நம்முடைய சமையலறையில், பலவிதங்களில் சமைப்பதால் எண்ணைப் பிசுக்குகள் கண்டிப்பாக ஏற்படும்.

nathan

நம்ம இந்திய ஆண்களின் மனதில் குடி கொண்டிருக்கும் வினோத ஆசைகள்!!!

nathan