27.3 C
Chennai
Sunday, May 19, 2024
857199002c75fc51a660390c33fae9d165cb7f477704279214172310913
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு போடுவது மட்டுமே!..

அதிர வைக்கும்
பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்!

பழம் தமிழர் மரபாகட்டும்,
இந்திய பண்பாடாக இருக்கட்டும்.
அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டதுதான்.

முடி வெட்டுவதில்
இருந்து. மன்னர்கள் முடி சூடுவது வரை கடைப்பிடிக்கபடும்
சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன.

வாழ்க்கையை நெறி படுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப் படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது.

இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.

பொதுவாக வெற்றிலை பாக்கு
சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது.

857199002c75fc51a660390c33fae9d165cb7f477704279214172310913

அதே நேரம் இதயத்தையும்
வலுப் படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான
காரணத்தை சித்த வைத்தியமும் ஆயுர்வேதமும் சொல்லும் போது உடம்பில் உள்ள “வாதம்,
பித்தம், கபம் (சிலேத்துமம்)” போன்றவைகள் சரியான
விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய்
வருகிறது என்று சொல்கிறார்கள். இது முற்றிலும் சரியான காரணமாகும்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில்
அமைந்து விட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து
நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) நம் உடம்பிற்கு வருகிறது.

இந்த மூன்று நிலைகளையும் சரியான படி வைக்க தாம்பூலம்
உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க
கூடியது.

சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை நீக்க வல்லது.

வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும்.

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று
தோஷங்களையும் முறை படுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

இது மட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம்,
கிராம்பு, ஜாதி பத்திரி போன்றவைகள் வாயில் உள்ள
கிருமிகளை மட்டுபடுத்துகிறது.
ஜீரண சக்தியை அதிகரிக்கவும்
செய்கிறது.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.

அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்க படுகிறது.

தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு
சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய கொடிய பழக்கமாக
மாறி விடுகிறது.

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில்
புகையிலையே கிடையாது.

புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட கொடிய போதை பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு
ஆகும்.

சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.

பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை கூட பரிசாக தந்து விடுகிறது.

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு
முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு
சீக்கிரம் ஏற்படாது.

இதற்கு காரணம்
அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு
குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக
கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க
பட்டிருக்கிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

காரணம் மதிய நேரம் வந்து வெப்பம்
அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் அது உணவில்
உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுப்படுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்து கொண்டால் நெஞ்சில் கபம்
தங்காது.இந்த முறையில்தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.

Related posts

நாம் நல்ல பழக்கம் என்று கடைப்பிடிக்கும் சிலவன உண்மையில் தீய பலனை தான் அளிக்கின்றன!!!வாரத்தில் ஒரு மு…

nathan

சூப்பர் டிப்ஸ்! பாகற்காய் சாப்பிடவே பயமா இருக்கா? இத படிங்க இனி தினமும் சாப்பிடுவீங்க..!

nathan

யாரெல்லாம் பாதாம் பால் குடிக்கக்கூடாது தெரியுமா?

nathan

வீட்டில் தயாரிக்கும் தயிர் ஏன் கெட்டியாக உள்ளது? தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

காலை வேளையில் குடிப்பதற்கு ஏற்ற சில ஆரோக்கிய பானங்கள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் ஏன் தர்பூசணியின் தோலை கட்டாயம் சாப்பிட வேண்டும் என

nathan

ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமளிக்கும் தமிழர்களின் 6 பானங்கள்

nathan

தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள்!!!

nathan

உணவு விடுதிகளில் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள்

nathan