27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1535112285
முகப் பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! முக இளமை முதல் முடி உதிர்வு வரை உதவும் பிரியாணி இலை டீ..!

நம் எல்லோருக்கும் பிரியாணி மிகவும் பிடித்தமான ஒன்றுதான். பிரியாணி என்றாலே அதற்காக எங்கே வேண்டுமானாலும் செல்லும் கூட்டத்தை, இன்றும் நம்மால் பார்க்க முடியும். இத்தகைய பிரபலமான உணவாக இன்றும் பிரியாணி இருந்து வருகிறது. இதற்கு இந்த வகையான ருசியை தர ஏராளமான பொருட்கள் உதவுகிறது. அவற்றில் ஒன்றுதான் இந்த பிரியாணி இலையும். இத்தகைய பெருமை வாய்ந்த இந்த இலை அதிக ஆரோக்கியத்தை கொண்டது.

அத்துடன் இது கூந்தல் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் சேர்த்தே பாதுகாக்கிறது. பொதுவாக இலைகள் பலவற்றில் பல வகையான ஆரோக்கிய குறிப்புகளும், அழகு குறிப்புகளும் இருக்கும். அதே போன்றுதான் பிரியாணி இலையும் சில அற்புதமான அழகு குறிப்புகளை தனக்குள்ளே வைத்திருக்கிறது. அவை என்னென்ன என்பதை இனி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பிரியாணி இலை எப்படி..?
இந்த பிரியாணி இலையில் நிறைய ஊட்டசத்துக்கள் உள்ளது. இவை உடல் வலுவிற்கு எந்த அளவில் உதவுகிறதோ, அதே அளவிற்கு முக மற்றும் முடியின் அழகிற்கும் பயன்படுகிறது. இவற்றில் உள்ள ஊட்டசத்துக்கள்…

புரதம் – 7.61 g

வைட்டமின் எ – 206%

வைட்டமின் சி – 77.5%

பொட்டாசியம் – 529 mg

சோடியம் – 23 mg

ஜின்க் – 33%

இரும்புசத்து – 537%1535112285

இளமையை காக்க… நீங்கள் அதிக இளமையுடன் இருக்க பிரியாணி இலைகள் உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடலின் செயல்பாட்டை சீராக வைத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது, முக சருமத்தில் உள்ள செல்களை மறு உற்பத்தி செய்து முகத்தை இளமையாக வைக்கிறது. இதனால்தான் பிரியாணி சாப்பிடுபவர்கள் சற்றே அழகாக தோன்றுகிறார்கள் போல..!

முடி உதிர்வுக்கு… கால மாற்றங்களினாலும் பல்வேறு வாழ்வியல் சூழலாலும் முடியின் ஆரோக்கியம் கெட்டு விடுகிறது. இதனை சரி செய்ய பல மருந்துகள் இருந்தாலும் இந்த பிரியாணி இலை வேறு விதத்தில் உதவுகிறது. பிரியாணி இலை டீ இந்த முடி உதிர்வு தொல்லையை நிறுத்த செய்கிறது. மேலும் இது ஒரு சிறந்த டானிக் போல வேலை செய்கிறது

சரும எரிச்சலை குணப்படுத்த… உங்களுக்கு அடிக்கடி சருமம் சார்ந்த பிரச்சினைகள் வருகிறதா..? இனி அதனை சரி செய்ய பிரியாணி இலைகள் இருக்கிறது. 5 காய்ந்த பிரியாணி இலைகளை எடுத்து 2 கப் நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். இந்த நீரில் எரிச்சல் கொண்ட சருமத்தை கழுவுங்கள். அல்லது முகத்தை அதில் முக்கி எடுங்கள். சரும எரிச்சல்கள் நீங்கும்.

பொடுகு பிரச்சினைக்கு… அதிக அழுக்குகள் தலையில் சேர்வதால், அது பொடுகு ஏற்பட வழி வகுக்கிறது. இனி இதனை குணப்படுத்த பிரியாணி இலையை நீருடன் கொதிக்க வைத்து, வடிகட்டி கொள்ளவும். அடுத்து அதனுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.

பாம்பு கடிக்கு மருந்தாக.. பாம்பு கடித்தால் எண்ணற்ற வழிகளை நாம் முயற்சிப்போம். அதில் ஒரு முறைதான் இந்த பிரியாணி இலை மருத்துவமும். இந்த இலைக்கு இயற்கையாகவே விஷத்தை முறிக்கும் தன்மை உள்ளது. அத்துடன் இது ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கள் தன்மை கொண்டது. எனவே தோலில் ஏதேனும் கிருமிகள் இருந்தாலும் அழித்து விடும்.

பேன் தொல்லைக்கு முற்றுப்புள்ளி… பெண்களுக்கு இருக்கும் தலை சார்ந்த பிரச்சினைகளில் இந்த பேன் தொல்லை சற்றே மோசமானது. இது தலையில் வந்தால் அத்தோடு சேர்த்து பொடுகு, அழுக்குகள், முடி உதிர்வு போன்றவற்றையும் தரும். பிரியாணி இலைகளை நீரில் கொதிக்க விட்டு, வடிகட்டி பின் அதனை தலைக்கு அலச பயன்படுத்தினால் தலையில் உள்ள பேன் தொல்லை விரைவிலேயே நீங்கும்.

பிரியாணி மட்டுமா..! பிரியாணி சாப்பிடுவது இயல்புதான். ஆனால், அவற்றின் இலைகளை பிரியாணியில் நாம் ஒதுக்கி வைக்கிறோம். இருப்பினும் அதன் சத்துக்கள் பிரியாணியில் இறங்கி விடுவதால் உடலுக்கு எளிமையாக நன்மைகள் கிடைத்து விடுகிறது. மேலும், பிரியாணி இலையை உணவில் மட்டும் சேர்த்து கொள்ளாமல், அவற்றை இது போன்று முக மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்துக்கள். மேலும் இது போன்ற புதுமையான அழகு குறிப்புகளை பெற எங்கள் இணைய பக்கத்தை லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள்.

Related posts

பக்கவிளைவுகள் இல்லாத. இயற்கை ஃபேஷியல்கள்.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…ஆச்சரியப்பட வைக்கும் சில நேச்சுரல் மேக்கப் ரிமூவர்கள்!!!

nathan

ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள அசிங்கமான தழும்புகள் மற்றும் பருக்களைப் போக்கும் சூப்பர் டிப்ஸ்!

nathan

முகத்தில் கரும்புள்ளியால் அவதிப்படுகிறீர்களா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்களே உங்க முகத்தில் உள்ள கருவளையத்தை போக்கணுமா? இதோ எளிய நிவாரணம்

nathan

அடுக்களையிலேயே அழகாகலாம்! – 2

nathan

‘இந்த’ ஆயுர்வேத பியூட்டி டிப்ஸ் மட்டும் நீங்க ஃபாலோ பண்ணா…

nathan

முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறத்தை போக்கிடும் குங்குமப் பூ!சூப்பர் டிப்ஸ்

nathan

இளமையைப் பாதுகாக்க இரவில் போட வேண்டிய இயற்கை ஃபேஸ் பேக்

nathan