சரும பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! கவர்ச்சியான தோற்றத்திற்கு சில எளிய வழிகள்!!!

நாளுக்கு நாள் கவர்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா? ஆனால் அதிக அளவு நேரம் மற்றும் பணத்தை செலவிட முடியாத நிலையில் இருக்கிறீர்களா? இதோ சில இயற்கையான எளிய வழிகள்…

புத்துணர்வுமிக்க காற்றை சுவாசியுங்கள், உங்களுடைய பிரதிபலிப்பை பார்த்து புன்னகை புரியுங்கள், யோகாசன நிலைகளை கற்றுக் கொள்ளுங்கள். அழகாக இருப்பது என்பது மேக்கப் போடுவது மட்டுமே அல்ல.

நீங்கள் நன்றாக தோற்றமளிக்க விலையுயர்ந்த பேஸியல்கள் அல்லது காஸ்மெடிக்ஸ் தேவையில்லை. எனினும், இந்நாட்களில் ஓடும் காலத்தை தடுத்து நிறுத்தி, வயதாவதை குறைத்து காட்டுவதே அழகு என்று கருதப்படுகிறது. இதோ நீங்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்க உதவும் எளியை வழிமுறைகள்.

நடனமாடும் நிலை
நீங்கள் எங்கே இருந்தாலும், உங்களுடைய கண்கள், பாதங்கள் மற்றும் கைகளின் அசைவுகளை நடனமாடுவது போல திடீரென அசைக்கவும். ‘நீங்கள் உங்களுடைய கண்களை சற்றே அசைக்கும் போதும் அல்லது பாரம்பரிய நடனம் போல கைகளை அசைக்கும் போதும், உங்கள் மனம் உடலின் இந்த உன்னத அசைவுகளை ஆர்ப்பரிப்புடன் வாழ்த்தும்’ என்று பிரபல நடனக் கலைஞான கீதா சந்திரன் சொல்கிறார். ‘நீங்கள் ஒரு நாளின் எந்த ஒரு நேரத்திலாவது நடன அசைவுகளை கொண்டு வந்தால், உங்களுடைய உடலுடன் ஆச்சரியமிக்க வகையில் ஒன்றி விடுவீர்கள் மற்றும் அழகை உணருவீர்கள்’ என்று மும்பையைச் சேர்ந்த பெல்லி நடனக் கலைஞர் வெரோனிகா

நேராக நடந்து, உயரமாக உட்காருங்கள்
நீங்கள் சோர்வாக இருந்தால், உங்களைப் பற்றி குறைவாக எண்ணுகிறீர்கள் என்று பொருள். நாற்காலிகளில் நேராக உட்காருபவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் என்று சமூக உளவியல் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘நீங்கள் நேராக அமரும் போது, சொல்லும் செய்து இது தான்: நான் என்னைப் பற்றி நல்லதையே நினைக்கிறேன்.’ என்று ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மெக்கோனிகல் என்று உளவியலாளர் குறிப்பிடுகிறார்.

ஒற்றைக் காலில் நிற்கவும்
யோகாசனங்களை தொடர்ந்து செய்யத் துவங்குவதன் மூலம் உங்களுடைய உடலை விழிப்படையச் செய்யவும், மனம் மற்றும் உடலை ஒருமுகப்படுத்தவும் முடியும். ‘யோகாசனம் ஒரு புத்தாக்க சக்தியை உருவாக்குகிறது. உங்களுடைய மனம் மற்றும் உடல் இரண்டிலும் நீங்கள் ஒரு புதிய மேன்மையான அழகை உணருவீர்கள். உங்களுடைய தோல், முடி மற்றும் நகங்கள் ஒரு புதிய வாழ்க்கையைப் பெறுகின்றன மற்றும் நிரந்தரமாக ஒளிரத் தொடங்குகின்றன. இது வயதாகும் விஷயத்தை பின்னோக்கி இழுத்து வருகிறது.’ என்று பிரபல யோகா வல்லுநர் சிவா ரியா குறிப்பிடுகிறார்.280666 5 smileatthemirror

பிடித்த பாட்டை பாடுங்கள்

நீங்கள் ஒரு இடத்தில் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக அமர்ந்திருந்தால், வெளியேறி வாருங்கள். மெதுவாக நடந்து கொண்டே உங்களுக்குப் பிடித்த ஒரு பாட்டை பாடத் தொடங்குங்கள். மாற்றத்தை உணருங்கள். ‘நமக்குப் பிடித்த ஒரு சுறுசுறுப்பான பாடலை பாடுவது சிறந்த சக்தியைத் தரும். உங்களுடைய குரலை உயர்ந்த தொனியில் கேட்பதால், உங்களுக்கும் சற்றே ஆறுதலாக இருக்கும்’.

கண்ணாடியும் நானும்
கண்ணாடிக்கு முன் சென்று இலேசாக சிரிக்கத் தொடங்குங்கள். உங்கள் உதடு விரிவதை கண்ணாடியில் நீங்கள் பார்க்கும் போது நீங்கள் மகிழ்ச்சியை உணருவதுடன், மன அழுத்தம் குறைவதையும் உணருவீர்கள். ஒருமுறை புன்னகை

செய்யும் உங்கள் உடலில் ஏற்படும் இரசாயன மற்றும் உடல் ரீதியான மாற்றங்கள், உங்களுடைய உடலில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்டோர்பின்ஸ்களை உற்பத்தி செய்ய முடியும். ‘நம் உள்ளுக்குள் இருக்கும் இதமான உணர்வையும் மற்றும் பளபளப்பையும் உணர்த்தும் சிறந்த வழிமுறை புன்னகை பூப்பது தான்’ என்று நடனக் கலைஞர் சரினா ஜெயின் குறிப்பிடுகிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button