அடேங்கப்பா!மகன் வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் பிரபல நடிகை…!

தமிழ் சினிமாவில் 90 களில் நடித்த ஒரு சில நடிகர் நடிகைகளை நாம் இன்னும் ஞாபகம் வைத்துள்ளோம். அந்த வரிசையில் சிலர் மட்டுமே இன்றுவரை உள்ளனர். அவர்கள் தற்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவர்கள் நடித்த படங்கள் இன்றும் பார்த்து ரசிக்கத்தக்க வகையில் தான் உள்ளது என்று தான் சொல்லவேண்டும். அந்த வரிசையில் உள்ள ஒரு நடிகை தான் தபு.. காதல் தேசம் படத்தில் திவ்யாவாக தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் நடிகை தபு. பின் இருவர், சினேகிதியே, கண்டுகொண்டேன், டேவிட் என சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக இருக்கும் இவருக்கு வயது தற்போது 48 ஆகிவிட்டது. திருமணமும் இவர் செய்து கொள்ளவில்லை. சினிமாவுக்கு தன்னை அர்ப்பணித்துவிட்டார். சினிமா துறையில் அன்று முதல் இன்று வரை தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் வைத்துள்ளார் இவர் என்று சொல்வதில் தவறு ஏதும் இல்லை. அந்த அளவிற்கு ஒரு பிரபலமான நடிகை தான் இவர்.

இவர் அடுத்ததாக நடித்துள்ள டிவி சீரிஸ் A Suitable Boy. மீரா நாயர் இயக்கியுள்ள இந்த தொடரில் அவருடன் இஷான் கத்தர் என்ற இளைஞர் நடித்துள்ளார். 24 வயதான இவர் 48 வயது நடிகையுடன் ரொமான்ஸ் செய்து குறித்து சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த செய்தியானது தற்போது மக்கள் மத்தியில் கிசுகிசுக்க பட்டு வருகிறது.

Leave a Reply