மறுபடியும் ஒன்று சேர்ந்த நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி!கோயில் கோயிலாக சென்று வேண்டுதல் ..!!

சினிமா வட்டாரங்களில் மிக ட்ரெண்டிங்கான பல செய்திகள் அவ்வப்போது வெளியானாலும், இவர்களது செய்தி தான் இன்றைக்கு டாப் என்று சொல்லலாம்.. தமிழ் சினிமா வட்டாரத்தில் இப்போது காதல் ஜோடியாக சுற்றும் பிரபலங்கள் என்றால் அது நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி தான். லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா அவர்கள் தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகின்றார்.. சமீப காலமாக இவர்கள் இருவரும் பொது இடத்தில்ஒன்றாக செல்வது, வெளி நாடுகளுகளுக்கு பயணம் செல்வது, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

 

இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா..? என்ற கேள்விக்கு மட்டும் இருவரும் மௌனம் ஒன்றையே பதில் அளித்து வருகின்றனர். தற்போது நயன்தாரா நடித்து வரும் மூக்குத்தியம்மன் படத்திற்காக இருவரும் சேர்ந்து கோயில் கோயிலாக சென்று வேண்டி வரும் புகைப்படங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. இவர்கள் இருவரின் புகைப்படங்கள் தான் சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டாக உள்ளது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு இவர்களிடம் இருக்கும் மெசேஜ் இவர்களது ரசிகர்களால்எதிர்பார்க்கபடுகின்றனர்.

 

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தற்போது கும்பகோணத்தில் உள்ள ஒரு கோயிலில் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டுள்ளார். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு நயன்தாரா வரவில்லை. இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Leave a Reply