இப்படி ஒரு நிலையா பிரபலமான சீரியல் நடிகருக்கு?

பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் பிரபலங்கள் பலருக்கு சொந்த வாழ்க்கையில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றன .

அப்படி சமீபத்தில் ஜெயஸ்ரீ, மகாலட்சுமி, ஈஸ்வர் பிரபலங்களின் பிரச்சனை பெரும் விவாதமாக்கப்பட்டது . தற்போது அவர்களின் விஷயம் மறைந்துபோக புது பிரச்சனை ஒன்று தலையெடுத்துள்ளது . அதாவது பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், நிறம் மாறாத பூக்கள் என சீரியல்களில் முக்கிய நாயகனாக நடித்த அசீம் தன்னுடைய மனைவியை பிரிந்து விட்டார் என்று கூறினார்கள் .அதற்கு பிறகு சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஒருவருடன் காதலில் இருப்பதாக சொல்லப்பட்டது. அசீம் தனது இன்ஸ்டாவில் தனது மகனின் புகைப்படத்தை முதன்முதலாக பகிர்வு செய்தார். இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில், சமீபத்தில் என்னை பற்றி ஒரு வதந்தி பரவியது , அது எனக்கு அதிக மன உளைச்சலை ஏற்படுத்தியது , இப்போது அதை பற்றி பேச விரும்பவில்லை. என்னுடைய சொந்த காரியம் அது என பேட்டி அளித்துள்ளார் .

Leave a Reply