ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுங்கள்!!

பாதாம் உடல்நலம் காக்கும் ஒரு உணவு ஆகும்.அதில் பலவகையான சத்துக்கள் உள்ளன.நியாபகசக்தியை அதிக படுத்தும் பணியை பாதாமில் உள்ள சத்துக்கள் செய்கின்றன. வைட்டமின் மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. இதில் வைட்டமின் E,கால்சியம்,மக்னிசீயம்,ஒமேகா 340 அசிட் ஆகியவை அதிகமாக உள்ளது. இதன்முலம் நமது உடம்பின் மொத்த உறுப்புகளையும் மேம்படுத்தும் சக்தி பாதாமுக்கு உள்ளது.

மேலும் மொத்த சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் இரவு முழுவதும் பாதாமை நீரில் ஊற வைக்க வேண்டும். அப்போது தான் அதனை தோல் மெதுவாக ஆகி அதனை நீக்கும் வண்ணம் இருக்கும். இயற்கையாகவே அதன் தோல் பகுதி கடினமானதாக இருக்கும். அவற்றை அப்படியே சாப்பிட்டால் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்காது.

ஒரு கிண்ணத்தில் பாதாம் எடுத்து அதனை நீரில் ஊற்றி அதனை காலையில் எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பிப்ரோடீனை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இதய நோயை தடுக்கும்
�தேவையற்ற கொழுப்புகளை பாதாம் வர விடாமல் பார்க்கிறது.மேலும் நல்ல கொழுப்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.இதய நோய்கள் வராமல் தடுக்கின்றது.இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது.பாதாமில் சக்திவாய்ந்த அண்டி ஆக்சிடண்ஸ் இருக்கு.இதனால் நீங்கள் உணவில் பாதம் எடுத்துக்கொண்டால் இதய நோய் வராமல் தடுக்கின்றது.

இரத்த அழுத்தத்தை தடுக்கும்
இரத்தத்தில் இருக்கிற ஆல்பா ட்ரொகொப்ரால் இரத்த அழுத்தம் வராமல் தடுக்கின்றது.பாதாம் அதிகம் சாப்பிட்டுவந்தால் அது ஆல்பா ட்ரொகொப்ரலின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.இதனால் இரத்த அழுத்தம் வராது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.இது 30முதல் 70 வயது உள்ளவர்களுக்கு அதிக பலம் தருகிறது.

Related posts

சூப்பர் டிப்ஸ் தேங்காயை பச்சையாக மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!

nathan

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 10 உணவுகள்…!

nathan

தொண்டை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சுக்கு மிளகு பால்

nathan
Live Updates COVID-19 CASES