சரும பராமரிப்பு

சூப்பர் டிப்ஸ்! பப்பாளியின் சில அழகு இரகசியங்கள்!!!

மிதவெப்ப மண்டலத்தை சேர்ந்த பழமான பப்பாளிக்கு பல்வேறு பயன் மிக்க குணங்கள் உள்ளன. இந்த பழத்தை தனியாகவும் சாப்பிட முடியும் அல்லது சாலட்கள், ஐஸ் கிரீம், ஸ்மூத்தீஸ் மற்றும் சல்சாஸ் போன்ற வகையறாக்களுடனும் சாப்பிட முடியும். இதனை முடி மற்றும் தோல் பராமரிப்புக்கான கனியாகவும் பயன்படுத்தலாம்.

இந்த பழத்தை வாங்கி சருமத்தில் நேரடியாக பயன்படுத்தி பயன் பெற முடியும். கீழ்காணும் வழிமுறைகளில் பப்பாளியை நீங்கள் பயன்படுத்தில அழகையும் மெருகூட்டலாம்.

பப்பாளியும்… முக அழகும்… டிர்யு என்று அழைக்கப்படும் பீட்டா ஹைட்ராக்ஸைல் அமிலம் என்ற வேதிப்பொருள் பப்பாளியில் உள்ளது என்று என்ற இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தோலின் மேல்பகுதியில் உள்ள இறந்த பகுதிகளை நீக்கி, புதிய தோலை மென்மையாகவும், வளமாகவும் மாற்றும் சக்தி டீர்யு-விற்கு உள்ளது. மேலும், பப்பாளியில் உள்ள குணங்கள் அழுக்கையும், எண்ணெய் பிசுபிசுப்பையும் நீக்கி அரிப்பும் வராமல் தடுக்கின்றன. ஊங்களுடைய தோலை மென்மையாக வைத்திருக்க விரும்பினால், பப்பாளிப் பழத்தை எடுத்து மெல்லிய படலமாக உங்களுடைய தோலில் தடவி, சில நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவிக் கொள்ளுங்கள். இறந்த தோல் பகுதிகளை நீக்கும் மற்றுமொரு பொருளான ஆல்ஃபா ஹைட்ராக்ஸில் அமிலத்தை விட, பப்பாளியில் உள்ள டீர்யு பொருள் மிகவும் குறைவான எரிச்சலையே தரும். எனினும், சில பேரக்கு பப்பாளி அலர்ஜியாகவும் இருக்கும் என்பதால், இதனை சற்றே கவனித்து, கவனமாக பயன்படுத்த வேண்டும்.

பப்பாளியும்… மென்மையான தோலும்… வயதாகும் போது சிலருடைய உடலில் ஆங்காங்கே நிறமிகள் சரிசமமில்லாத வகையில் உருவாகும். தோலில் உள்ள இந்த கருமையான புள்ளிகளை நீக்கும் மருந்துகளை தோல் சிகிச்சை வல்லுநர்களிடமிருந்து பெற முடியும். ஆனால், பப்பாளியில் தயாரிக்கப்படும் ஃபேஸியல் மாஸ்க் மூலம், இந்த சரிசமமில்லாத நிறமிகள் உள்ள இடங்களை சரி செய்ய முடியும் என்று மேரி கிளேர் இதழ் குறிப்பிடுகிறது. இந்த ஃபேஸியல் மாஸ்கை தயார் செய்து நிறமிகள் மற்றும் கரும் புள்ளிகளில் தடவி சரி செய்வது எளிமையான செயலாகும். மேலும் இது செலவும் குறைவாகவே எடுக்கும். 2 தேக்கரண்டிகள் தேனுடன், ½ கோப்பை பப்பாளியை அரைத்து வைத்தால் ஃபேஸியல் மாஸ்க் தயார். இந்த கலவையை முகத்தில் மெலிதாக தடவி 15-20 நிமிடங்களுக்கு வைத்திருந்து விட்டு, வெந்நீரில் முகத்தைக் கழுவவும். இவ்வாறு செய்த பின்னர் மாய்ஸ்ட்ரைஸரை தோலில் போட்டுக் கொள்ளுங்கள்.papaya beauty tips

பப்பாளியும்… ஆரோக்கியமும்… ஒருவருடைய அழகை மேம்படுத்துவது வெளிப்புறத்தை அடிப்படையாக கொண்டது, ஆனால் உண்மையான அழகு என்பது ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் பராமரிப்பது தான். உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதன் நல்ல மென்மையான தோலையும் மற்றும் ஆரோக்கியமில்லாமல் இருப்பவர்களை விட திறமையுடனும் இருப்பார். மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுவது உடல் நலத்தை மேம்படுத்தும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ‘பப்பாளியில் வைடடமின் சி உள்ளது. அது மிகவும் திறன் மிக்க ஆக்சிஜன் எதிர்பொருளாக இருப்பதால் வயாதாகும் போது ஏற்படும் சேதங்களை பெருமளவு குறைக்கிறது. மேலும், பப்பாளி ஆர்த்ரிடிஸ், இதய நோய் ஆகியவை வராமல் தடுப்பதுடன், புற்று நோயையும் கூட தடுக்க வல்லதாக உள்ளது’ என்று மேரிலாண்ட மெடிக்கல் சென்டர் பல்கலைக்கழத்தினர் குறிப்பிடுகின்றனர்.

பல்வேறு அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தக் கூடிய பொருளாக பப்பாளி உள்ளதால், அந்த பொருட்களை பெரும்பாலான கடைகளில் உங்களால் வாங்க முடியும். இந்த பொருட்களில் சிலவற்றை காய்கறி மற்றும் மளிகை கடைகளில் கூட வாங்கலாம். உங்களுக்கு பப்பாளியை வீட்டிற்கு வாங்கி வந்து, மேற்கண்ட குறிப்புகளின் படி பயன்படுத்த முடியவில்லை என்றால் கூட, கடைகளில் பப்பாளி கலந்து விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்தி பலன் பெறலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button