மருத்துவ குறிப்பு

தினமும் ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லதா?

தினமும் ஒயின் குடிப்பது உடலுக்கு நல்லதா?

தினமும் ஒயின் குடிப்பது நல்லதென மேல் நாட்டவர்கள் பலரும் நம்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் கடைப்பிடிக்கவும் செய்கிறார்கள். அது கொடுக்கும் இன்பத்திற்காகக் குடிப்பவர்களே அதிகம். பெண்களும் இதில் அடங்குவர். உண்மையில் ஒயினின் மருத்துவ பயன்கள் பற்றி பல ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளன.

திராட்சை ரசம் எனப்படும் இது புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இருதயத்தைப் பாதுகாக்கிது. வயதாகும் போது ஏற்படும் மூளை மந்தமாவதைத் தடுக்கிறது, நீரிழிவு, மூட்டுவாதங்களைத் தடுக்கிறது என இப்படிப் பல ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. ஒயின் பானத்திற்கு ஆரோக்கிய ரீதியான நல்ல பக்கம் இருப்பது போலவே கெட்ட பக்கங்களும் உண்டு.

உதாரணமாக அது கெட்ட கொலஸ்டரோல் ஆன triglyceride அளவை அதிகரிப்பதாகத் தெரிகிறது. எனவே ரைகிளிசரைட் அளவு அதிகமுள்ளவர்களுக்கும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளவர்களுக்கும் நல்லதல்ல. உதாரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும்பாலும் ரைகிளிசரைட் அதிகரித்தே காணப்படுகிறது. எனவே அத்தகையவர்களுக்கு ஒயின் ஏற்றதல்ல.

கபாலக் குத்து எனப்படும் (Migraine) நோயாளிகள் பலருக்கும் ஒயின் தூண்டியாக இருப்பது தெரிகிறது. முக்கியமாக ரெட் ஒயின் (Red wine) அருந்தியதும் பலருக்கு காபலக் குத்து பட்டென வந்துவிடுகிறது. ஒயின் உடலிலுள்ள பெண் ஹோர்மோன் ஆன ஈஸ்ரோஜன் அளவை அதிகரிப்பதால் மார்புப் புற்றுநோய் வந்தவர்களுக்கும் வர வாய்ப்புள்ளவர்களுக்கும் நல்லதல்ல.

ஒயின் என்பது உண்மையில் ஒரு மது. மதுவில் உள்ளது வெற்றுக் கலோரிகளே. உதாரணமாக ஒரு கிராம் மாப்பொருளில் 4 கலோரிகள் இருக்கிறது. அதேபோல ஒரு கிராம் புரதத்திலும் 4 கலோரிகள் இருக்கிறது. ஆனால் ஒரு கிராம் மதுவில் 7 கலோரிகள் இருக்கிறது. இதனால் அது உடல் எடை அதிகரிப்புக்கும் காரணமாகிறது.

ரெட் ஒயின், நிறமற்ற ஒயினைவிட அதிக நன்மைகளைத் தருகிறதாம். காரணம் என்னவெனில் ரெட் ஒயின் உற்பத்தியின் போது திராட்சையின் தோல் நீண்ட நேரம் அகற்றப்படாது இருப்பதால் வைனில் ரெஸவெடரோல் செறிவு அதிகமாக இருப்பதே ஆகும். ஆனால் நிறமற்ற ஒயின் உற்பத்தியின் போது புளிக்க விடும் முன்னரே திராட்சையின் தோல் அகற்றப்படுகிறது.

தினமும் ஒயின் அருந்துவராயின் தொடர்ந்து அருந்துவதில் தவறில்லை. ஆனால் அளவோடு மட்டுமே. ஆண்கள் தினமும் இரண்டு டிரிங்ஸ்சும், பெண்கள் தினமும் ஒரு டிரிங் மட்டுமே ஒயின் அருந்தலாம். ஒரு டிரிங் என்பது 5 அவுன்ஸ் அல்லது 140 மில்லி லீட்டர் ஆகும். அளவை மிஞ்சினால் ஈரல் பாதிப்படைவது உட்பட மதுவின் அனைத்து தீமைகளும் வந்து சேரும்.

வழக்கமாக மது அருந்தாதவர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக ஒயின் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமா என்று கேட்டால் நிச்சயம் அவசியம் இல்லை. ஒயின் உட்பட எந்த மதுவையும் குடிக்காதிருப்பது நிச்சயம் நல்லது. அதிலிருந்து பெறக் கூடிய ஒரு சில நல்ல பயன்களை ஏனைய உணவு வகைளிலிருந்து தாராளமாகப் பெறலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button