உடல் பயிற்சி

காலையில் தினமும் உடற்பயிற்சி செய்யுறவங்களா? இதை படியுங்கள்

தற்போதுள்ள காலக்கட்டத்தில் உடலை ஆரோக்கியமாகவும் பிட்டாகவும் வைத்துக் கொள்வதற்கான வழிகளில் ஒன்றாக உடற்பயிற்சி உள்ளது. மேலும் உடற்பயிற்சியின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் மட்டுமே தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்கிறார்கள். ஆனால் சிலர் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்று நினைப்பார்கள். இருப்பினும் சோம்பேறித்தனத்தால், உடற்பயிற்சி தானே நாளை செய்து கொள்ளலாம் என்று சாதாரணமாக நினைத்து விட்டுவிடுவார்கள்.

மேலும் உடற்பயிற்சி என்றால் அது கடினமானதாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வாக்கிங், ஜாக்கிங் போன்ற சிம்பிளான உடற்பயிற்சியை மேற்கொண்டாலே போதும். குறிப்பாக உடற்பயிற்சியை காலையில் செய்தால் அதனால் கிடைக்கும் பலனே தனி தான். அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே காலையில் உடற்பயிற்சியை செய்து வந்தால், கிடைக்கும் நன்மைகளைப் பட்டியலிட்டுள்ளோம்.

பசியை அதிகரிக்கும் பசியின்மையால் அவஸ்தைப்படுபவர்கள், காலையில் உடற்பயிற்சியை செய்து வந்தால், பசி நன்கு எடுக்கும். இதனால் மூன்று வேளையும் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் செரிமான மண்டலம் மற்றும் குடலியக்கம் சீராக நடைபெறும்.

எனர்ஜியை அதிகரிக்கும் தினமும் காலையில் உடற்பயிற்சியை செய்து வர, உடலின் ஆற்றல் அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் செயல் பட முடியும்.

மனதை சீராக செயல்பட உதவும் காலையில் செய்யப்படும் உடற்பயிற்சியினால் மனம் நன்கு ரிலாக்ஸாக இருப்பதுடன், எதிலும் நன்கு கவனத்தை செலுத்த முடிவதுடன், புத்திக்கூர்மையாக இருக்கும்.2809576 jogging

மன அழுத்தத்தை குறைக்கும் காலையில் லேசாக வாக்கிங் போன்ற சிம்பிளான உடற்பயிற்சியை செய்தால், மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தில் இருந்து விடுபடலாம். மேலும் எப்போதாவது மனம் மிகவும் கஷ்டமாக இருக்கும் போது, காலையில் சிறிது தூரம் நடந்தால், நல்ல காற்றை சுவாசிக்க நேரிடும். இதனால் மனம் லேசாகிவிடும்.

எடை குறைவு எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், காலையில் உடற்பயிற்சியை செய்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் கரைக்கப்படும்.

நிம்மதியான தூக்கம் ஆய்வு ஒன்றில் மாலையில் உடற்பயிற்சி செய்பவர்களை விட, காலையில் உடற்பயிற்சியை செய்வோருக்கு தான் நல்ல நிம்மதியான தூக்கம் வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் தசைகளானது தளர்வடைய நேரம் அதிகம் தேவைப்படுவதால், காலையில் உடற்பயிற்சி செய்தால் தான், உடற்பயிற்சியின் போது இறுக்கமடைந்த தசைகள் தளர்வடையும். அதுவே மாலையில் செய்தால், அது தூக்கத்திற்கு தான் இடையூறு விளைவிக்கும்.

ஒட்டுமொத்த ஆரோக்கியம்
காலையில் உடற்பயிற்சி செய்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதுடன், இரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் தசைகளுக்கு செல்லும் இரத்தத்தின் அளவை சீராக வைத்துக் கொள்ளும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button