24.6 C
Chennai
Friday, Dec 27, 2024
nails
நகங்கள்

உங்களுக்கு தெரியுமா நகம் உடைவதைத் தடுக்க உதவும் நம்பகமான 7 வழிகள்!!!

நன்றாக பராமரிக்கப்பட்ட மற்றும் அழகிய நகங்களைப் பெறவே ஒவ்வொரு பெண்ணும் கனவு காணுவாள். அவை வட்டமாக இருந்தாலும் சரி, சதுரமாக இருந்தாலும் சரி, குறையற்றவையாகவும் மற்றும் மிகவும் இனிமையானவையாகவும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் அவா!

ஆனால், வீட்டு வேலைகளை செய்யும் போதும் மற்றும் காய்கறிகளை நறுக்கும் போதும், தங்களுடைய அழகிய நகங்களை இழந்து தவிக்கும் பெண்கள் இங்கு அதிகம். இதோ, இந்த கட்டுரையின் வழியாக நகங்கள் உடைவதை தடுக்க உதவும் சில நம்பகமான வழிகளை நாங்கள் கொடுக்கிறோம்.

ஒரே வடிவம்/திசையில் வெட்டவும் நகம் உடைவதை தவிர்க்க உதவும் பொதுவான டிப்ஸ்களில் இது முதன்மையானதாகும். நீங்கள் நகங்களை வெட்டி அழகு படுத்தும் வேளைகளில், இரண்டு புறமும் தேய்த்தால், அந்த நகத்தின் முனையில் ஏராளமான அழுத்தம் ஏற்பட்டு உடையக் கூடிய நிலை ஏற்படும். இவ்வாறு, ஒரே பக்கத்தில் நகத்தை தேய்த்து வெட்டச் சொல்வது சற்றே வித்தியாசமாக இருந்தாலும், இந்த யோசனை நகங்களை உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் மற்றும் நீளமாகவும் வளரச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

நகங்களுக்கு வர்ணம் அடிக்கவும் உங்களுடைய நகங்களின் மேலாக வர்ணம் அடித்திருந்தாலோ அல்லது நெயில் பாலிஷ் அடித்திருந்தாலோ, அதன் மூலம் சுற்றுச்சூழல்களின் அச்சுறுத்தல்களிலிருந்து அவற்றை பாதுகாக்க முடியும். ஸ்க்ரப்பிங், துணிகளை துவைத்தல் போன்ற வேலைகளை செய்யும் போது இந்த மேற்பூச்சுகள் நகங்களை காக்கும் அரண்களாக உள்ளன.

ஈரமான நகங்களை பராமரித்தல் உங்களுடைய நகங்கள் ஈரமாக இருக்கும் வேளைகளில், கடினமான வேலைகளை செய்வதை தவிர்க்கவும். ஈரமாக இருக்கும் நகங்கள், காய்ந்திருக்கும் நகங்களை விட மிகவும் எளிதில் உடையக் கூடியவையாக இருக்கின்றன.nails

நகங்களை தொடர்ந்து கவனித்து வருதல் தலைமுடி, முகம் மற்றும் உடற்பகுதியை கண்டிஷனர் போட்டு கவனித்து வருவதைப் போலவே நகங்களையும் தொடர்ந்து கவனித்து வர வேண்டியது அவசியமாகும். சுற்றுச்சூழல் காரணிகளாகலும், எனாமல் பயன்பாட்டினாலும் மற்றும் பிற காரணிகளாலும் உங்களுடைய நகங்கள் காய்ந்து போயும் மற்றும் கடினமாகவும் மாறியிருக்கும். இது போன்ற சூழல்களில், நகங்களுக்கான கிரீம்களை தடவி விட்டு, இரவு முழுவதும் வைத்திருந்து அவற்றை ஈரப்பதமாக வைத்திருக்கவும். இவ்வாறு வைத்திருப்பதால் நகங்களை ஆரோக்கியமாகவும் மற்றும் உறுதியாகவும் வைத்திருக்க முடியும்.

நல்ல தரமான நகவெட்டியைப் பயன்படுத்தவும் பெரும்பாலான பெண்கள் சந்தைகளில் மலிவு விலையில் கிடைக்கும் நகவெட்டிகளை வாங்கினாலும், நகப்பராமரிப்பு சார்ந்த பிற பொருட்களை உயர்தரமாக வாங்கி வருகிறார்கள். ஆனால், நகவெட்டிகளையும் தரமானதாக வாங்க வேண்டும் என்பதை மறந்து விட வேண்டாம். நல்ல தரமான நகவெட்டிகள் உங்களுடைய நகங்கள் சரியான வடிவத்தை பெறவும் மற்றும் ஒரே வெட்டில் நகத்தை வெட்டவும் உதவுகின்றன. மேலும் இது நகம் மற்றும் தோலின் பிற அடுக்குகளையும் பாதிக்காமல் இருக்கின்றன. எனவே, தரமான நகவெட்டிகளை வாங்குவது நன்மை தரும்.

நகம் ஒரு கருவியல்ல… நம்மில் பலரும் நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்தி ஸ்குரூக்களை கழட்டுதல் அல்லது காதுகளை சுத்தம் செய்தல் போன்ற வேலைகளை செய்வோம். இது போன்ற வேலைகளை செய்வதிலிருந்து உங்களுடைய நகங்களுக்கு விடுதலை கொடுங்கள். இது குறிப்பாக இந்திய பெண்கள் உடடினயாக பின்பற்ற வேண்டிய யோசனையாகும்.

நகங்களை ஊற வைத்தல் நகங்களில் உள்ள எனாமல்களை நீக்கும் பொருட்டாக நம்மில் பலரும் நெயில் பாலிஷ் நீக்கும் திரவத்தை, பருத்தி துணியில் நனைத்து, கடினமான முறையில் நகங்களை தேய்ப்பதால் நன்மை எதுவும் விளைவதில்லை. இதற்கு மாறாக, நனைந்த பருத்தி துணியை நகத்தின் மீது ஒரு நிமிடம் ஊற வைத்து நெயில் பாலிஷ்களை கரைக்க முயற்சி செய்யவும். அதன் பின்னர், மென்மையாக தேய்த்து பார்த்தால், எனாமல் உண்மையிலேயே காணாமல் போய் நகம் அழகுற இருப்பதைக் காண முடியும்.nailpolish

Related posts

நகங்களின் பளபளப்பிற்கும் வளர்ச்சிக்கும்

nathan

உடையாத நீளமான நகம் வேண்டுமா?

nathan

நகங்களை பராமரிக்க சில டிப்ஸ்கள்

nathan

நகங்களுக்கு அழகு தரும் நெயில் ஆர்ட்

nathan

இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றினால், நீங்களும் ஒரு அழகி தான்!

sangika

நகங்களை வைத்து நோய்களை அறியலாம்!!!

nathan

ஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்.

nathan

நகங்கள் விரைவாகவும் நீளமாகவும் வளர சில எளிய வழிமுறைகள் !…

sangika

இயற்கை முறையை பயன்படுத்தி நீளமான மற்றும் உறுதியான நகங்களை பெற முடியும்.

nathan