​பொதுவானவை

பெண் குழந்தைகளுக்கு தொடுதலை பற்றி சொல்லி கொடுங்க

பெண் குழந்தைகளுக்கு தொடுதலை பற்றி சொல்லி கொடுங்க
குழந்தைகள் பள்ளி, ட்யூஷன், கோச்சிங் கிளாஸ், வார இறுதி வகுப்புகள், மற்ற பள்ளிகளுக்கு சென்று பங்கேற்கும் போட்டிகள், ட்ரெயினிங் சென்டர், இன்னும் என்னென்ன இடங்களுக்கு யாருடன் சென்று வந்தாலும், விசாரணை போல இல்லாமல் தோழமையுடன் நடந்ததை கேட்டறிய வேண்டும்.எப்போதுமே குழந்தைகளுக்கு வீட்டுக்கு வந்ததும் யாரிடமேனும் பகிர வேண்டும் என்ற ஆவல் இருக்கும். நாமோ வேலைச்சுமையில் நிராகரித்திருப்போம்… அதை மனதில் கொண்டே அவர்களும் தவிர்க்கின்றனர் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். முடிந்த வரை குழந்தைகளின் நண்பர்கள், அவர்களின் பெற்றோரிடம் அறிமுகம் இருப்பது நன்று.

ட்யூஷன் போன்ற மற்ற வகுப்புகளுக்கும் ஒரு முறையேனும் பெற்றோர் இருவரும் சென்று அறிமுகம் தருவதும் அவசியம். எந்த வயதிலிருந்து ‘குட் டச்… பேட் டச்…’ சொல்லித் தரலாம்? எப்படிச் சொல்லித் தருவது? குட் டச்…….. இந்த விஷயத்தை டெக்னிகலாக கூறி குழந்தைகளை குழப்ப வேண்டாம்… மிக மிக எளிதாக, அவர்கள் வழியிலேயே சொல்லி புரியவைப்பதுதான் நல்லது.

எந்த ஒரு டச் அவர்களை ‘ரொம்பவே கம்ஃபர்டபிளாக’ உணர செய்கிறதோ அது குட் டச். உதாரணமாக… அம்மாவோ அப்பாவோ ‘குட்மார்னிங்’ சொல்லி அணைப்பது, ஆசிரியர்கள் பிள்ளைகளின் முதுகில் தட்டிக் கொடுப்பது, நண்பர்களுடன் செய்யும் ஹை ஃபைவ், ஷேக் ஹேண்ட்ஸ், செல்லமாக மாமாவோ, சித்தப்பாவோ, அக்காவோ தலையில் கொட்டுவது, தடவுவது என்று எந்த ஒரு தொடுதல் அவர்களை அன்பாகவும் பாதுகாப்பாகவும் உணரச் செய்கிறதோ, அது குட் டச்… ‘அவர்கள் சம்திங் ஸ்பெஷல்’ எனத் தொடுதலில் உணர்தலும் குட் டச்… தொடுதல், முத்தமிடுதல் கூட சில நேரம் பாதுகாப்பாக உணரச் செய்யும்.

பேட் டச்……. அறிமுகமானவர்களோ, அறிமுகமற்றவர்களோ தேவையற்ற வேளையில் தேவையற்ற உடல் பகுதிகளில் தொடுவதும், அத்தொடுதலை மனதும் உடலும் விரும்பாததுமே பேட் டச். அப்படித் தொடுபவர்களை பார்த்தாலே குழந்தைகள் பதற்றம் அடைவார்கள், அவர்களிடமிருந்து மறைமுகமாக விலகி இருக்க விரும்புவார்கள்.

அது அவர்களையும் அறியாமல் வெளிப்படும். இதை அவர்கள் சில நேரம் சொல்லியும்  உணர்த்துவார்கள். அந்தத் தொடுதல் அவர்களுக்கு ஒரு பயத்தை உருவாக்கும்… மூட் அவுட் செய்யும்… கவனமின்மையை உண்டாக்கும். குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டியவற்றில் முக்கியமானது எப்படி ‘நோ’ சொல்லுவது என்பதே.

அவர்களின் உடல் குறித்த தெளிவான அறிமுகம், செல்ஃப் சேஃப்டி, சேஃப் பாடி ரூல், ரகசியம் என்றால் என்ன? வெளியிடங்களில் பாதுகாப்பு, இன்டர்நெட் பாதுகாப்பு, அறிமுகமற்றவர்களிடம் எப்படிப் பழகுவது, பணிபுரியும் பெற்றோர் எனில் வீட்டில் தனிமையில் இருக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு இவை அனைத்தையும் விவாதிக்கலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button