ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா நீங்க தூங்குற ‘லட்சணத்திலேயே’ உங்க பெர்சனாலிட்டியை தெரிஞ்சுக்கலாமாம்…!

இரவில் தூங்கும் போது, நாம் எப்படி தூங்குகிறோம், எந்த நிலையில் தூங்குகிறோம் என்பது தெரியாது. ஆனால் ஒருவரின் குணத்தை அவரது தூங்கும் நிலையைக் கொண்டே சொல்ல முடியும் என்று நிபுணர்கள் சொல்கின்றனர். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் ஒரு நிலையில் தூங்கினால் மிகவும் பிடிக்கும்.

அப்படி எந்த நிலை பிடிக்கிறதோ, பெரும்பாலும் அந்த நிலையிலேயே இரவிலும் தூங்குவார்கள். இப்போது எந்த நிலையில் தூங்கினால், என்ன குணம் இருக்கும் என்பதைக் கொடுத்துள்ளோம். இவைகளைப் படித்துவிட்டு, இரவில் தூங்கும் போது உங்கள் துணை அல்லது வீட்டில் உள்ளோரிடம் எந்த நிலையில் படுக்கிறீர்கள் என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அது எப்படி சொல்ல முடியும் என்று கேட்கலாம். அதற்கு சைக்காலஜிஸ்ட் ஒருவர் சொல்வதாவது, ஒருவர் தூங்கும் போது உடலானது ஒருவரது சுபாவத்திற்கு ஏற்றவாறு மாறும் என்று சொல்கிறார். சரி, இப்போது எந்த நிலையில் படுத்தால், என்ன குணம் உள்ளவர்கள் என்று பார்ப்போமா!!!

சுருங்கி படுப்பது படுக்கும் போது, படத்தில் காட்டியவாறு சுருங்கிப் படுப்பவர்களானால், அவர்கள் தனிமையை விரும்பமாட்டார்கள். அவர்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கஷ்டம். மேலும் அவர்கள் வெளித்தோற்றத்தில் கரடுமுரடானவர்களாக இருந்தாலும், மன அளவில் மிகவும் சென்சிட்டிவ் மற்றும் அதிக வெட்கப்படும் குணம் உடையவர்கள். அதனால் தான் பெரும்பாலான பெண்கள், இந்த நிலையில் படுக்கிறார்கள்.1 sleep

கைகளை மடக்கி படுப்பது படத்தில் காட்டப்பட்டிருப்பது போன்று தூங்குபவர்களாக இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் எதையும் ஈஸியாக எடுத்துக் கொண்டு செல்பவர்கள்.2 sleep

போர்வையை போர்த்தி தூங்குவது சிலர் தூங்கும் போது உடலை போர்வையால் போர்த்தி தூங்குவார்கள். அத்தகையவர்களிடம் ஒரு தனித்துவமான குணம் என்றால், அவர்கள் எந்த ஒரு உணர்ச்சியையும் அவ்வளவு எளிதில் வெளிப்படுத்தமாட்டார்க்ள. மேலும் தனக்குள்ள கஷ்டத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்.3 sleep

கை மற்றும் கால்களை விரித்து தூங்குவது தூங்கும் போது கை மற்றும் கால்களை விரித்துக் கொண்டு தூங்கினால், அவர்கள் எதையும் நன்கு கவனிப்பார்கள். மேலும் நண்பர்களுடன் எப்போதும் இருக்க விரும்புவார்கள்.4 sleep

குப்புறப் படுப்பது குப்புறப் படுப்பவர்களானால், அவர்கள் எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். மேலும் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய விரும்பாதவர்கள்.84 5 sleep

பக்கவாட்டில் படுப்பது பக்கவாட்டில் படுப்பது பிடிக்கும் என்பவர்கள், எதற்கும் கவலைப்படாதவர்கள் மற்றும் எல்லாவற்றிலும் குற்றம் குறைகளை சொல்வார்கள்.6 sleep

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button