மருத்துவ குறிப்பு

கருப்பையை பாதுகாப்பு முறை

 

கருப்பையை பாதுகாப்பு முறை அதிகமாக உதிரம் போதல் வலி சிறிய கட்டிகள் வெள்ளைப்படுதல் ஆகியவற்றை காரணம் காட்டி கருப்பையை அகற்ற வேண்டாம். இது போன்ற பிரச்சனைகளுக்கு மாற்று வழிகளை கடைபிடிக்கலாம்.

கட்டி மிகவும் பெரிதாக இருத்தல் வளர்ந்து கொண்டே போதல் கேன்சர் கட்டியாக மாற வாய்ப்பு இருத்தல் மாதவிடாய் உதிரம் மருந்துக்குக் கட்டுப்படாமல் போதல் போன்ற வழியில்லாத காரணத்தால் மட்டுமே கருப்பையை அகற்றலாம். பிறகு கட்டி வரலாம் என்ற கற்பனையில் கருப்பையை அகற்றக் கூடாது.

நவீன மருத்துவத்தில் சினைப்பை மற்றும் கருப்பையை அகற்றாமலேயே கட்டியை அகற்ற லேப்ராஸ்கோபி முறையில் பல சிகிச்சைகள் உள்ளன. மெனோபாஸ் பிரச்சனைகளுக்கு கர்ப்பவியல் நிபுணர்களை அணுகும் போது சரியான மருத்துவம் கிடைக்கும். கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் அதில் சில பிரச்சனைகளும் இருக்கும். கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

24 வயது முதல் 64 வயது வரை உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் மூன்று ஆண்டுக்கு ஒரு முறை பேப்ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முடிந்தளவு கருப்பை மற்றும் சினை முட்டைப்பையை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

Related posts

கடுகு எண்ணெய்யில் இவ்வளவு நன்மைகளா? அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

nathan

முதுகு வலி, இடுப்பு வலி இன்றி, இனி நிம்மதியாக வேலை செய்யலாம்!!!

nathan

தலைமுடியை வலிமையாக்கும் சில வீட்டு வைத்தியங்கள்!

nathan

உங்கள் முகம், உடல்நலனை பற்றி என்ன கூறுகிறது என உங்களுக்கு தெரியுமா???

nathan

காதல் எதிரிகளை கண்டறிந்து அகற்றுங்கள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…புஷ்-அப் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

தெரிஞ்சிக்கங்க…வைட்டமின்-D குறைபாட்டிற்கான பொதுவான காரணங்கள் யாவை?

nathan

உடல் வீக்கத்தால் அவதியா? இதோ குணமாக்கும் மருந்து

nathan

கர்ப்ப காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

nathan