மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையை இயற்கையான முறையில் தடுக்க சில வழிகள்!!!

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பு கோளாறு ஆகும். எலும்பின் அடர்த்தி மற்றும் பருமன் ஆகியவற்றில் சுரப்பிகளின் மாறுதல்களால் ஏற்படும் கோளாறுகளாகும். இதனால் எலும்பு முறிவு மற்றும் எலும்பு மூட்டுக்களில் வலி ஆகியவை ஏற்படுகின்றன. கால்சியம் சீரமைப்பு முறையை பெண்களிடத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆண்களிடத்தில் டெஸ்டோஸ்டிரான் ஆகியவை செய்கின்றன.

இந்த சீரமைக்கும் சுரப்பிகளின் சுரக்கும் தன்மை 60 வயது ஆன பெண்களுக்கும், 70 வயது ஆன ஆண்களுக்கும் குறையத் துவங்குகின்றது. ஆகையால் வயதானவர்கள் இத்தகைய நோய்க்கு பெருமளவு ஆளாகின்றார்கள். இதை சரி செய்வதற்காக பல சுரப்பிகளின் மாத்திரைகள் கிடைக்கின்றன. இதை கொண்டு எலும்புகளில் ஏற்படும் இக்குறைபாட்டை இயற்கையாக நீக்கலாம்.

அதிலும் உணவு முறைகளை சரியாக கடைப்பிடிக்கும் போது, இத்தகைய குறைகளை குறைக்க முடியும். அதுவும் கீழ் வரும் பகுதியில் உள்ள ஊட்டச்சத்துகளை தினசரி உட்கொண்டால் ஆஸ்டியோபோரோசிஸை தடுக்க முடியும்.

கால்சியம் இது உடலின் செயல்களை சீராக அமைக்க உதவுகின்றது. நமக்கு தேவையான அளவு கால்சியத்தை தினசரி எடுத்துக் கொள்ளாவிட்டால் நமது உடல் எங்கு அதிகம் கால்சியம் உள்ளதோ அந்த இடத்திலிருந்து கால்சியத்தை எடுத்துக் கொள்கின்றது. இதனால் எலும்புகளின் சக்தி குறைந்து, அவை உடையும் தன்மைக்கு வந்து விடுகின்றன. இப்படி இருந்தால் நாம் ஒரு நாளைக்கு எவ்வளவு கால்சியத்தை உண்ணவேண்டும்? ஒரு நாளைக்கு ஏறக்குறைய 1000 – 2000 மில்லி கிராம் வரையிலும் கால்சியம் தேவைப்படுகின்றது. இதை நாம் தயிர், பால், சோயா, சோயா பால், டோஃபு, கெட்டித்தயிர், குறைந்த கொழுப்புள்ள ஐஸ் கிரீம், வெள்ளை பீன்ஸ், சைனீஸ் கோஸ், கேல், கொலார்டு கிரீன்ஸ், ப்ராக்கோலி, பாதாம் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றில் இது அதிகம் உள்ளது.

வைட்டமின் டி வைட்டமின் டி இல்லாமல் கால்சியத்தை உண்பது உபயோகமில்லாமல் போய்விடும். கால்சியத்தை உடல் ஏற்றுக் கொள்வதற்கு வைட்டமின் டி தேவைப்படுகின்றது. மனித உடல் ஏற்கனவே சூரிய வெளிச்சத்திலிருந்து உடம்பில் சேகரிக்கப்பட்ட முன்னோடிகளிடமிருந்து வைட்டமின் டி தயார் செய்யப்படுகின்றது. அதிக அளவு சூரிய ஒளியில் வெளிப்படுத்துவது உடம்பிற்கு கேடு விளைவிப்பது மட்டுமல்லாமல் புற்றுநோயை தூண்டுவதாகவும் உள்ளது. ஆகையால் இதை நாம் உணவாக எடுத்துக் கொண்டு ஈடு செய்ய முடியும். சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி, கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் முட்டை மஞ்சள் கரு ஆகியவற்றில் வைட்டமின் டி அதிகளவில் உள்ளது.

தினசரி உடற்பயிற்சி எடை தூக்குதல் மற்றும் சக்தியை ஏற்றும் பயிற்சி ஆகியவைகளை கலந்து செய்வது உடம்பில் உள்ள எலும்புகளை வலுவடையச் செய்யும். ஓடுவதும், டென்னிஸ், யோகா, நீச்சல், நடை, பூப்பந்து, கால்பந்து, பில்லேட்ஸ் ஆகியவைகளை பயின்று உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் எலும்புகளும் உறுதிப்படுகின்றனmenosteoporosis

மது அருந்துவதை குறைத்தல்
மது அருந்துவது உடம்பில் ஆல்கஹால் அளவை அதிகப்படுத்தி எலும்புகளை நாசம் செய்கின்றது. இது கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை உடல் ஈர்த்துக் கொள்ள விடாமல் செய்கிறது. அதுமட்டுமல்லாமல் பாரா தைராய்டு சுரப்பியை அதிகரித்து கால்சியம் மற்றும் வைட்டமின் டி-யை உடைக்கின்றது. அதுமட்டுமல்லாமல் கார்டிசோல் என்று கூறப்படும் கால்சியம் சேகரிக்க உதவும் சுரப்பியை குறைவாக சுரக்கச் செய்கின்றது. எலும்புகளை உருவாக்கும் அணுக்களான ஓட்டியோபிளாஸ்ட்களை உருவாக விடாமல் தடுக்கின்றது. ஆகையால் மது அருந்துவதை 2-3 அவுன்ஸ் குறைத்துக் கொள்வது ஆஸ்டியோபோரோசிஸை இயற்கையாக தடுக்கும் என்பதில் ஐயமில்லை.

புகைப் பிடிப்பதை நிறுத்துதல் புகையிலை மற்றும் புகைப் பிடிப்பதால் எலும்பு அடர்த்தியை குறைக்கின்றது. இதனால் எலும்பு முறிவு அதிகரித்து அது ஆறுவதற்கு நீண்ட காலம் எடுக்கின்றது. இதற்கான சரியான காரணத்தை இன்னும் கண்டறிய முடியவில்லை. ஆனால் எவ்வளவு புகை பிடிக்கின்றோமோ அவ்வளவு அளவிற்கு அதிகமாக எலும்பின் உறுதித்தன்மையும் குறைகின்றது. இதனால் வயதான காலத்தில் எலும்பு முறிவு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படுகின்றது. புகைப் பிடிக்காதவர்களுக்கும், பிடிப்பவர்களுக்கும் இடையே என்ன உடல் சம்மந்த வேறுபாடு இருந்ததென்பதை ஆராய்ந்ததில் இவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் குறைவாக சுரப்பதை கண்டறிய முடிந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button