ஆரோக்கிய உணவு

ஏமாந்து விடாதீர்கள்.விழித்து கொள்ளுங்கள்..!!

1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது
2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்
3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்
4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது
5. ஆயில் புல்லிங்
6. காம்பிளான் குடித்தால் வளரலாம்
7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா
8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா
9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி
10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்

வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலைப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன் உண்டு..

34330288663b964edca9dd750906b7013a624baf3134169121514091998

நிலக்கடலை:

நம் ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என சில வருடங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின.

அதன் பிறகு நிலக்கடலை மோகம் நம்மைவிட்டு பிரிந்துசென்றது. அதனை தொடர்ந்து பாதாம் பிஸ்தா என வாங்கி உண்டோம். அந்த இடைவெளியில் கடலைகள் நம் ஊரில் அதிகமாக தேங்க இதுதான் சரியான நேரம் என்று ஒட்டுமொத்தமாக உலகின் மிகப்பெரிய சாக்லேட் நிறுவனம் அதை குறைந்த விலைக்கு அள்ளிச்சென்றது.

பின்விளைவு:

பாதாம் பிஸ்த்தா பதித்த சாக்லேட்டுக்கு பதில் வெளிநாடுகளில் நிலக்கடலைகள் பதித்த சாக்லேட்டுகள் அமோக விற்பனையாக தொடங்கியது.. ஏனென்றால் அவர்களுக்கு தெரியும் நிலக்கடலை.

உடலுக்கு மிகவும் உகந்ததென்று சில வருடங்களுக்கு முன் அரிசியை அதிகளவு உண்பதால் நம் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகிறது என்ற தகவல் பரவி அது அனைவரையும் அரிசியை அதிகம் உண்ணவிடாமல் செய்தது அதற்கு மாறாக நாம் கோதுமை உணவை அதிகம் எடுத்துக்கொண்டோம்.

அதிக விலைக்கு பன்னாட்டு நிறுவனங்களால் மேலை நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்பட்ட்து.

உணமையாக நமது உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் உணவு எது தெரியுமா மைதா.

சச்சின் கூறினார் என்று பூஸ்ட் வாங்கினோம், ஆனால் அதில் நாம் விளைவிக்கும் மக்காச்சோளமும் கேப்பையும்தான் இருக்கிறது. என்பதை அறியாமல்.

டோனி கூறினார் என்று பெப்சி குடித்தோம், இன்று இளநீரின் எல்லாம் மருத்துவகுணங்களை அறிந்தவன் கைக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது.

இப்படியே ஒவ்வொன்றையும் இழந்துகொண்டிருக்கிறோம் நாம் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம், என்று உணராமல்
இன்னும் கொஞ்ச நாட்கள் சினிமாவிலும், கிரிக்கெட்டிலும் மூழ்கி விடுங்கள் நாளை நீங்கள் உங்களையே இழந்துவிடுவீர்கள்.

இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன் மதுக்கடைகள் அதிகரிப்பது மட்டும் தீங்கு அல்ல, மருத்துவமனைகள் அதிகரிப்பதும் தீங்கின் அடையாளம்தான்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button