​பொதுவானவை

பெற்றோர்களே பருவ வயது பெண் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள்

பெற்றோர்களே பருவ வயது பெண் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள்
சமீப காலமாக பெற்றோர், குழ்ந்தைகளின் இடையே பெறும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. ஓர் பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக வலைதளங்களின் ஈர்ப்பு. மற்றொரு பக்கம் மேற்கத்திய கலாச்சாரம், பார்ட்டி. பெற்றோருக்கு பணம் சம்பாதிக்க வேண்டி ஓட வேண்டிய கட்டாயம்.குழந்தைகள் கையில் ஸ்மார்ட் ஃபோனை வைத்துக் கொண்டு உலகை சுற்றி ஓடுகின்றனர். மற்றொன்று தன் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்றே தெரியாத நிலையில் இன்றைய வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் இருக்கிறார்கள். பருவ வயது பெண் குழந்தைகளுடன் நல்ல உறவை வைத்து கொள்ள சில வழிமுறைகளை பெற்றோர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.உங்கள் பெண் குழந்தைகளோடு நண்பர்களாக பழகுங்கள், வாழ்வியல் குறித்து பேசுங்கள், முக்கியமாக இல்லறத்தைப் பற்றி பேசுங்கள். இதை பற்றி மற்றவர்கள், சமூக வலைதளம் மூலம் தவறாக தெரிந்து கொள்வதை விட நீங்களே அதை பற்றி விரிவாக புரிய வைப்பது நல்லது. உங்கள் குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து பழகுங்கள்.

படிப்பு, உடை, உணவு மட்டுமின்றி, உணர்வுகளையும் அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். முக்கியமாக பெண் பிள்ளைகளுக்கு சமூக வலைதளம் பற்றியும், அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று எடுத்து கூறுங்கள். ஒவ்வொரு தாயும், பெண் குழந்தையிடம் உடல் உணர்வுகளைப் பற்றி கட்டாயம் பேச வேண்டும்.

அப்போது இந்த வயதில் ஏற்படும் எல்லை மீறல்களை தடுக்க முடியும். இன்று நாளுக்கு நாள் புதிதாய் ஓர் இளம் மங்கையின் நிர்வாணப் படம் வாட்ஸ்அப்பில் உலாவி வருகிறது. அதுவும் பள்ளி செல்லும் பிள்ளைகள். காதல் என்று கூறி ஏமாற்றப்படுகின்றனர்.

இதில் இந்து அவர்களை காக்க பெண்மையை பற்றியும், நானம், கூச்சம், காதல் பற்றிய தெளிவாக கூறுங்கள். தாத்தா, பாட்டி எனும் உறவுகளை வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களே குழந்தைகள் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்வார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button