விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் Valentine’s Day Celebration Photos !

என்ன தான் பிஸியாக இருந்தாலும் தனது காதலருடன் தனது நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார் நயன். அதே போல விக்னேஷ் சிவனும் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலி நயன்தாராவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களின் வயிற்றெரிச்சலை கிளப்பி வருகிறார். சமீபத்தில் நடிகை நயன்தாரா கிறிஸ்துமஸை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடினர். அந்த புகைப்படங்களும் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவியது.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் தினம் வாழ்த்துக்களை தெரிவித்து, நயன்தாராவுடன் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் ” எங்களுடைய காதலுக்கு 5 வயதாகிறது” என்று Caption போட்டு, விக்னேஷ் சிவன் மேல் சாய்ந்தபடி மிகவும் ரொமான்டிக் போசை கொடுத்துள்ளார் நயன். இந்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பதிவிட்ட 20 நிமிடத்தில் 50 ஆயிரம் லைக்சுகளுக்கு மேல் கடந்து சென்றுள்ளது. வழக்கம் போல இந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில் இதுவரை தங்கள் திருமணம் பற்றி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை. ஆனால், இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர்ச்சுற்றிக் கொண்டும், நெருக்கமாக புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவருவதை வாடிக்கையாகவும் வைத்து வருகின்றனர்.

Leave a Reply