ஆரோக்கிய உணவு

அறுகம்புல் சாறு தயாரிப்பது எப்படி? அதன் பலன்கள் என்ன?

 

அறுகம்புல் சாறுஅறுகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.


அறுகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம்.


கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அறுகம்புல் எளிதாகக் கிடைக்கிறது. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம்.

தேவைப்பட்டால், அறுகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம்.

அறுகம்புல் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

மருத்துவ குணங்கள்: 

* அறுகம்புல் சாற்றில் வைட்டமின் ‘ஏ’ சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம். 

* உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அறுகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அறுகம்புல் சாறு சீராக்குகிறது.

* வாயுத் தொல்லை உள்ளவர்கள் அறுகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது. 

* நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அறுகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.

* நீங்கள் பொதுவாக அலோபதி, ஹோமியோபதி மருந்துகளை உட்கொண்டு வந்தாலும் அறுகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விளைவுகளும் கிடையாது. 

எப்போதும் எல்லோராலும் அறுகம்புல் சாறு தயாரித்து உட்கொள்வது என்பது சாத்தியப்படாது. இதனால் ரெடிமேடாக கடைகளில் பாக்கெட் வடிவிலும் சில இடங்களில் இது விற்பனைக்குக் கிடைக்கிறது. அவற்றையும் வாங்கிப் பருகலாம்.


பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்

Related posts

கவலையே படாதீங்க… வீட்ல நெய் இல்லயா?அதே டேஸ்ட் தரும் 8 பொருள்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா வெறும் வயிற்றில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்!

nathan

வெயிலுக்கு குளுமை தரும் ஃப்ரூட்ஸ் சாட்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த நோய் உள்ளவர்கள் பால் குடித்தால் உயிருக்கே ஆபத்தாம்!

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்!

nathan

இலவங்கப்பட்டையில் இவ்வளவு மருத்துவ பயன் இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

nathan

உடல் பலம் பெற சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா நுங்கில் இவ்வளவு சிறப்புகள் இருக்கா?

nathan

ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க……

sangika