மருத்துவ குறிப்பு

தலைவலியின் வகைகள்

தலைவலியின் வகைகள்
நமக்கு வரும் தலைவலிகளை மூன்று வகைகளாக பிரிக்கின்றனர். முதல் வகை சமூக மனவியல் காரணங்களால் வருகிறது. அதாவது மனஅழுத்தம், அயர்ச்சி, எரிச்சலூட்டும் நிகழ்ச்சிகளால் ஏற்படுகிறது. இரண்டாவது வகை உடல் சம்பந்தப்பட்டது.உடல் வகை, மருத்துவ வகை காரணங்களால் வரும் தலைவலி. இது கண்ணில் அதிகப்படி அழுத்தம், பல்வலி, பீனிசம் எனப்படும் மூக்கடைப்பு (சைனஸ்), சில வகை உணவுப்பொருட்கள், மருந்து வகைகளை சாப்பிடும் காரணத்தால், தூக்கமின்மையால், மிகக்குளிர்ந்த நீரில் குளிப்பதால், சினிமா, டி.வி. ஆகியவற்றை அருகில் இருந்து பார்ப்பதால், இப்படி பலவகை காரணங்களினால் இந்த தலைவலி ஏற்படுகிறது.மூன்றாவது வகை சிறிது ஆபத்தான வகையை சேர்ந்தது. யாரோ சுத்தியால் அடித்தது போல வலிக்கும். மூளைக்குள் ஏற்படும் சின்ன ரத்தக்கசிவுகள் தலைவலியாய் தோன்றி, மூளைக்குள் வலியாக வெடிக்கும். இது ‘மெனிஞ்சைட்டிஸ்’ என்ற காய்ச்சலின் ஆரம்ப அறிகுறி. ‘என்ஸெபலைட்டிஸ்’ என்கிற மூளைக்குள் வீக்கம் தான் இந்த வகை தலைவலியை உருவாக்கும்.

தாங்க முடியாத பயங்கரமான தலைவலி இது. பெரும்பாலான தலைவலிகள் முதல் வகையை சேர்ந்தவை. இந்த வகை தலைவலி வருவது நீங்கள் எப்படிப்பட்ட மனிதர் என்பதைப் பொறுத்தது. அதாவது, எப்படி வாழ்கிறீர்கள்? எவ்வாறு உணர்ச்சிவசப்படுகிறீர்கள், கோபப்படுகிறீர்கள்? எந்த அளவு பொறுமையாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

முதல் வகையில் சேரும் மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி மிகவும் ஆய்வு செய்யப்பட்டு, ஏராளமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வகை தலைவலிக்காரர்கள் பெரும்பாலானோருக்கு தலையில் பாகம் பிரித்தது போல் ஒரு பாதியில் மட்டும் வலிக்கும். காலையிலேயே இந்த தலைவலிக்கான எச்சரிக்கை ஏற்பட்டுவிடும்.

தொடர்ந்து தலைவலி ஏற்பட்டு செயல் மந்தமாகி, மாலையில் வாந்தி வருவது போல உணர்வு ஏற்படும். சிலருக்கு கண்ணுக்குள் கலர் கலராக மாடர்ன் ஆர்ட் போல தெரியும். இதெல்லாம் மைக்ரேன் வருவதற்கான அறிகுறி. இந்த ஒற்றைத் தலைவலியை ஒரு விதமான எச்சரிக்கை என்கிறார்கள்.

Related posts

ஈரலில் கொழுப்பு (ஈரல் நோய் ) பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை

nathan

உங்களுக்கு தெரியுமா நம் முன்னோர்கள் ‘அந்த’ விஷயத்திற்கு வயாகராவாக இந்த பொருட்களைத்தான் சாப்பிட்டார்களாம் ?

nathan

கருவில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிய உதவும் வித்தியாச தகவல்கள்! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கால்சியம் சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

தலை பாரத்திற்க்கான சித்த மருந்து

nathan

எலுமிச்சை சாறு

nathan

உங்களுக்கு தாங்க முடியாத தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

கவணம் உடலில் இரத்தகட்டி இருப்பதை வெளிப்படுத்தும் 6 முக்கிய அறிகுறிகள் இவை தான்

nathan

உட்கார்ந்தே இருந்தால் ஏற்படும் உபாதைகள்

nathan