மருத்துவ குறிப்பு

நோய் எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது?

 

Sick Indian woman
  • எல்லையிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் ராணு வத்தினரைப்போல், ஒவ்வொருவரின் உடலுக் குள்ளும் ஒரு எதிர்ப்புச் சக்தி செயல்பட்டு நம் ஆரோக்கியத்தைப்  பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. இந்த நோய் எதிர்ப்புச் சக்தி பற்றி தொற்றுநோய் சிறப்பு மருத்துவரான ராமசுப்பிரமணியன் விளக்குகிறார்.
  •  
  • வெள்ளை அணுக்கள் எனும் போர் வீரர்கள்
  •  
  • நம் ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத்தட்டுகள் ஆகியவை இருக்கின்றன. இதில் வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நோய்  எதிர்ப்புச் சக்தியைத் தருபவை. அதனால், வெள்ளை அணுக்களுக்குப் போர் வீரர்கள் என்று இன்னொரு பெயரும் உண்டு.
  •  
  • இன்று சுற்றுப்புறச் சூழல்  மாசடைந்து இருக்கும் நிலையில் தண்ணீர், காற்று, உணவு, சக மனிதர்களுடன் பழகுவது என்று எந்த வடிவிலும் நோயை உண்டாக்கும் கிருமிகள் நம்  உடலுக்குள் ஊடுருவலாம். அந்தக் கிருமிகளை எதிர்த்துப் போராடி நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வேலையை வெள்ளை அணுக்கள்  செய்கின்றன.
  •  
  • இரண்டு வகை சக்தி
  •  
  • நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு வகையில் நமக்குக் கிடைக்கிறது. ஒன்று பிறவியிலேயே அமையும் சக்தி. மாசடைந்த காற்றைச் சுவாசிக்கும்போது,  இயல்பாகவே உடல் அதை ஏற்றுக் கொள்ளாமல் நமக்கு மூச்சுத் திணறுகிறது. அந்த இடத்தைவிட்டு வெளியேறவேண்டும் என்று உடல் நம்மை  நிர்ப்பந்திக்கிறது.
  •  
  • இதுபோல், தோல் பகுதி, வயிற்றுக்குள் இருக்கும் அமிலம் என இயற்கையான எதிர்ப்பு சக்திகள் பல இருக்கின்றன. இன்னொன்று  அனுபவத்தின் அடிப்படையில் உடல் உருவாக்கிக் கொள்ளும் எதிர்ப்பு சக்தி. அதாவது, புதிதாக ஒரு நோய் ஏற்படும்போது அந்த நோயை எதிர்க்கும் சக்தி உடலுக்கு இல்லாமல் இருக்கலாம்.
  •  
  • ஆனால், பாதிக்கப்பட்ட பிறகு, அந்த நோய் பற்றி உடலில் இருக்கும் செல்கள் தெரிந்துகொள்ளும். இந்தக்  காரணங்களால் நோய் ஏற்படுகிறது என்பதை நினைவு வைத்துக் கொண்டு அதற்குத் தகுந்தாற்போல், உடல் எச்சரிக்கையாகிவிடும்.
  •  
  • இதற்கு நினைவு  செல்கள் என்று பெயர். இதனால்தான், ஒருவருக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டால் அதன்பிறகு அவரது வாழ்நாளில் சின்னம்மை நோய் மீண்டும் வருவதில்லை.
  •  
  • எதிர்ப்பு சக்தி குறையக் காரணம் என்ன..?
  •  
  • ஒரு சில பிறவிக் குறைபாடுகள் தவிர்த்து, பிறக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி எல்லோருக்கும் ஒரே அளவில்தான் இருக்கும். ஆனால், இந்தச் சக்தி  நாளடைவில் பல காரணங்களால் குறையும். சரிவிகித உணவு சாப்பிடாததால் ஏற்படும் சத்துக்குறைபாடு, பரம்பரைக் குறைபாடுகளால் ஏற்படும் நோய்,  உடல்நலக் குறைவின் காரணமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றால் குறையும்.
  •  
  • உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை  செய்யும்போதும் இந்த நோய் எதிர்ப்பு சக்தி குறையும். என்னதான் உடலின் ரத்த வகையை எல்லாம் பார்த்து உறுப்புகளை மாற்றினாலும், இது  என்னுடைய சிறுநீரகம் இல்லை, இது என்னுடைய இதயம் இல்லை என்பது அந்த உடலுக்குத் தெரிந்துவிடும். அதன்பிறகு, அந்த உறுப்பு மாற்றத்தை  ஏற்றுக் கொள்ளாமல் சண்டையிட ஆரம்பிக்கும்.
  •  
  • இதற்காக சில மருந்துகளைக் கொடுப்பார்கள். இந்தக் காரணங்களாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.  எச்.அய்.வி. போன்ற பாலியல் நோய்களாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க,  நம் அன்றாட வாழ்க்கை முறையை ஒழுங்குக்குள் கொண்டு வந்தாலே போதும். பெரிதாக ஒன்றும்  தேவையில்லை.
  •  
  • சைவமா, அசைவமா என்பதெல்லாம் பிரச்சினையில்லை. என்ன உணவு சாப்பிட்டாலும் உடலுக்குத் தேவையான வைட்டமின், புரதம்,  கார்போஹைட்ரேட், தாதுக்கள் ஆகிய சத்துகள் சரிவிகிதத்தில் கிடைக்குமாறு உணவுமுறையைப் பின்பற்றினாலே போதும். இன்று உடல் உழைப்பு  குறைந்த வேலைகளையே பலரும் விரும்புகிறோம்.
  •  
  • அதனால் எளிமையான உடற்பயிற்சி, அரைமணி நேரம் நடைப்பயிற்சி,  விளையாட்டுகள் என்று ஏதாவது உடல் செயல்பாடுகள் அவசியம். 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் முக்கியம். இதனுடன் புகை, மது  போன்ற தீய பழக்கங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிவேகத்தில் குறைப்பவை என்பதை சொல்லத் தேவையில்லை.
  •  
  • நோய் எதிர்ப்பு சக்திவேண்டும் என்பதற்காக வைட்டமின் மாத்திரைகளை சிலர் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இது எல்லோருக்கும் கை  கொடுக்காது. சில உணவுகள் சாப்பிட முடியாத நிலையில் வேண்டுமானால் வைட்டமின் மாத்திரை களை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல், நமது  ஊரில் பழங்கள் சாப்பிட்டாலே போதும் என்றும் நினைப்பார்கள். சரி விகித உணவு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.
  •  
  • தடுப்பூசி நல்லது
  •  
  • தடுப்பூசி என்பதே குழந்தைகளுக்குத்தான் என்று பலரும் நினைக்கவேண்டாம். ஆனால், தடுப்பூசி என்பது எல்லா தரப்பினருக்கும் தேவை.  உதாரணத்துக்கு, குழந்தையாக இருக்கும்போது 5 டெட்டன்னஸ் ஊசி போட்டிருப்பார்கள்.
  •  
  • ஆனால், டெட்டன்னஸ் தடுப்பூசி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை  போட்டுக் கொள்ளவேண்டும். இந்த ஊசி போட் டிருந்தால், இடையில் விபத்தில் அடிபட்டால்கூட தடுப்பூசி தேவையில்லாமலே நம்மைக்  காப்பாற்றிவிடும்.
  •  
  • கக்குவான், மஞ்சள்காமாலை என்று பல தடுப்பூசிகள் இருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்கவேண்டும் என்று  நினைப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்!


பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button