மருத்துவ குறிப்பு

தெரிந்துகொள்வோமா? உலகையே அச்சுறுத்தும் நீரிழிவு நோயை எப்படி விரட்டுவது?

இன்று உலகையே அச்சுறுத்தும் ஒரு வகையான நோய் இந்த நீரிழிவு நோய்தான். பத்தில் 6 பேருக்கு சர்க்கரை நோய்கான அறிகுறிகள் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது.

இன்சுலின் அளவு உடலில் குறைவு ஏற்படும்போது நமக்கு சர்க்கரை நோய் இருப்பதாக குறிப்பிடுகின்றோம். ஆனால் இதன் அளவை எவ்வாறு உயர்த்தலாம் என்று பார்த்தால் அதில் முதன்மையான பங்கு உணவிற்கு இருக்கிறது.

சில முக்கிய உணவுகள் சர்க்கரையின் அளவை கூட்டாமல் சீரான ஆரோக்கியத்தை தரும். அவற்றில் ஒன்றுதான் முட்டையும்.

சர்க்கரை நோயாளிகள் முட்டையை சாப்பிடலாமா என்பது சரியான கேள்வியே. ஏனெனில் முட்டையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

முட்டையில் பல ஊட்டசத்துக்கள் உள்ளன.

கலோரிகள் – 70
புரதம் – 6 g
சொலின் – 250 mg
ஒமேகா 3
வைட்டமின் எ, பி, டி, இ இதில் மிக முக்கிய குறிப்பு என்னவென்றால், இன்சுலின் அளவை முட்டை நன்கு உயர்த்துகிறது.
எப்படி சாப்பிட வேண்டும்?
சர்க்கரை நோயாளிகளுக்கென்று ஒரு மிக பெரிய வரையறைகளை வைத்து கொள்வார்கள்.
அதில் முக்கிய ஒன்று இதை சாப்பிட்டால் சர்க்கரை கூடும், அதை சாப்பிட்டால் கொலெஸ்ட்ரோல் கூடும் என்பதே. உணவில் ஜாக்கிரதை முக்கியம்தான். ஆனால்
அதற்காக பயம் கொள்ள தேவை இல்லை.
சர்க்கரை நோயாளிகள் மஞ்சளை காட்டிலும் வெள்ளை கருவை சாப்பிடுவதே உகந்தது.
வேண்டுமென்றால் மருத்துவரை ஆலோசித்து விட்டு இந்த இரண்டையும் சாப்பிடலாம். ஏனெனில் இவை இரண்டிலும் முக்கிய சத்துக்கள் உள்ளது.
முட்டையில் 186 mg கொலெஸ்ட்ரோல் உள்ளது. ஒரு சர்க்கரை நோயாளிக்கு தினமும் 200 mg இது இருக்க வேண்டும்.
எனினும் வெள்ளை கருவை மட்டும் சாப்பிட்டால் எந்தவித கொலெஸ்ட்ரோல் பிரச்சினையும் ஏற்படாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button