26.6 C
Chennai
Tuesday, Dec 3, 2024
tyseytey
அழகு குறிப்புகள்முகப்பரு

முயன்று பாருங்கள்.. கருமையைப் போக்கி சரும நிறத்தை விரைவில் அதிகரிக்கும் சாக்லேட் மாஸ்க்!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சாக்லேட் மிகவும் பிடிக்கும். கொக்கோ பிரியர்கள் சாக்லேட் அதிகம் விரும்பி உட்கொள்வார்கள்.

சாக்லேட் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. சாக்லேட் நாவின் சுவை மொட்டுகளை உயிர்ப்பிப்பதோடு மட்டுமில்லாமல் மனநிலையில் சந்தோஷமான உணர்வுகளை ஊக்குவிக்கும் எண்டோர்பின் என்னும் ஹார்மோனை ஊக்குவிக்கிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், சாக்லேட் சரும பாதுகாப்பிற்கு ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம்.

வைட்டமின் மற்றும் மினரல் ஆகியவற்றின் ஆதாரமாக இருக்கும் சாக்லேட் சருமத்தின் அழகை அதிகரித்து பொலிவை மீட்டுத் தருகிறது. உடலில் ப்ரீ-ராடிக்கல் என்னும் தீங்கு விளைவிக்கும் கூறுகள் உண்டாக்கும் சேதங்களைத் தடுக்கிறது, நீர்ச்சத்தை அதிகரிக்கிறது. இதனால் வயது முதிர்ச்சி தாமதம் அடைகிறது. அதனால் இன்றைய பதிவில் நாம் சாக்லேட் பயன்படுத்தி தயாரிக்கும் மாஸ்க் பற்றி அறிந்து கொள்ள இருக்கிறோம்.
tyseytey
கருமையைப் போக்கி சரும நிறத்தை விரைவில் அதிகரிக்கும் சாக்லேட் மாஸ்க்!
சாக்லேட் பீல் ஆஃப் மாஸ்க் செய்ய தேவையான பொருட்கள்:
* கொக்கோ பவுடர்

* தேன்

* பழுப்பு சர்க்கரை

jhggjh

கருமையைப் போக்கி சரும நிறத்தை விரைவில் அதிகரிக்கும் சாக்லேட் மாஸ்க்!
செய்முறை:

* ஒரு கிண்ணத்தில் 1/3கப் அளவு கொக்கோ பவுடர் எடுத்துக் கொள்ளவும். ¼ கப் அளவு தேன் மற்றும் 3-4 டீஸ்பூன் அளவு பழுப்பு சர்க்கரையை சேர்க்கவும்.

* எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும்

* இந்த கலவையை உங்கள் முகத்தில் எல்லா இடத்திலும் சீராகத் தடவவும்.

* முழுவதும் காயும் வரை காத்திருக்கவும்.

* முழுவதும் காய்ந்தவுடன் இந்த மாஸ்க்கை முகத்திலிருந்து மெதுவாகப் பிரித்து எடுக்கவும்.

* பிறகு நீரில் முகத்தைக் கழுவவும்.

* சுத்தமான காட்டன் துணியால் முகத்தை துடைக்கவும்

* நல்ல மாய்ஸ்ச்சரைசர் தடவி முகத்தை மென்மையாக மசாஜ் செய்யவும்.

* இதனை செய்து வருவதால் நல்ல முன்னேற்றம் தெரியும்.

jkhk

கருமையைப் போக்கி சரும நிறத்தை விரைவில் அதிகரிக்கும் சாக்லேட் மாஸ்க்!
சருமத்திற்கு சாக்லேட் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள் :

சாக்லேட் என்பது இந்த இடத்தில் கொக்கோ பவுடரை குறிக்கிறது. டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியும் . மேலும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது, சரும அணுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது, எடை இழப்பிற்கு உதவுகிறது. ஆனால் சருமத்திற்கு சாக்லேட் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து இங்கே காணலாம் .

* இளம் வயதில் உண்டாகும் முதிர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது

* சூரிய ஒளியின் வெளிப்பட்டால் உண்டாகும் புறஊதா கதிர் தாக்குதலால் ஏற்படும் சேதங்களைத் தடுக்கிறது.

* அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதன் காரணமாக ப்ரீ ராடிக்கல் சேதங்களைத் தடுக்கிறது.

* வைட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால் நீர் இழப்பு தடுக்கப்பட்டு சருமம் ஈரப்பதத்துடன் இருக்க உதவுகிறது.

* சரும வறட்சியைக் குறைத்து சருமத்தை மென்மையாக்குகிறது.

* சருமத்தில் கழிவுகளை அகற்றும் செயல்பாட்டை செய்கிறது.

* சருமத்தின் இறந்த அணுக்களை அகற்றி சருமத்தை தளர்த்த உதவுகிறது . இதனால் புதிய அணுக்கள் வளர்கிறது .

* சருமத்தின் இயற்கையான பொலிவும் பளபளப்பும் தக்க வைக்கப்படுகிறது

ghfj

கருமையைப் போக்கி சரும நிறத்தை விரைவில் அதிகரிக்கும் சாக்லேட் மாஸ்க்!
சருமத்திற்கு தேன் பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்:

தேனின் நன்மைகள் குறித்து நாம் அறிவோம். சரும பாதுகாப்பிற்கு தேன் எவ்வாறு பயன்படுகிறது என்பது பற்றி இப்போது அறிந்து கொள்வோம்.

* தேனிற்கு இயற்கையாகவே ஈரப்பதம் உண்டாக்கும் தன்மை இருப்பதால் சருமத்தில் நீர்ச்சத்தை பூட்டி , சருமத்தை மென்மையாக்க உதவுகிறது .

* தேனிற்கு அற்புதமான ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மை இருப்பதால் சரும அணுக்களில் உண்டாகும் சேதங்களைத் தடுக்க உதவுகிறது .

* கட்டிகள் மற்றும் பருக்கள் அதிகம் உண்டாகும் சருமத்திற்கு தேன் மிகவும் ஏற்ற ஒரு பொருள். கட்டிகளை உண்டாக்கும் கிருமிகள் சருமத்தை தீங்கு செய்யாமல் தடுக்க தேன் உதவுகிறது.

tryrt

கருமையைப் போக்கி சரும நிறத்தை விரைவில் அதிகரிக்கும் சாக்லேட் மாஸ்க்!
சருமத்திற்கு பழுப்பு சர்க்கரை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள்:

பழுப்பு சர்க்கரை சருமத்திற்கு எவ்வாறு உதவுகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.

* சர்க்கரைக்கு சருமத்தை தளர்த்தும் பண்புகள் இருப்பதால் பல இயற்கை ஸ்க்ரப்பில் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது.

* இதேபோல் , சருமத்தின் இறந்த அணுக்களின் அடுக்கை அகற்றி சருமத்தின் இயற்கையான பொலிவை மீட்டெடுக்க பழுப்பு சர்க்கரை உதவுகிறது.

Related posts

சரும வறட்சியைத் போக்கும் இயற்கை லோசன்கள்

nathan

அரோமா தெரபி

nathan

பொலிவான சருமத்தைப் பெற உதவும் பாதாம் -தெரிந்துகொள்வோமா?

nathan

குழந்தைகள் எப்போது நிம்மதியாக தூங்குவார்கள்

nathan

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ராஜ்கிரண்… இவ்வளவு அழகான பிள்ளைகளா?நம்ப முடியலையே…

nathan

ஆண்களுக்கு ஏற்பட்டுள்ள பாத வெடிப்பை சரி செய்வது எப்படி?….

sangika

தேன் இருந்தால் போதும் பாதவெடிப்பை சரிசெய்ய…!

nathan

சருமத்துக்கு எளிமையான ஃபேஸ்பேக்! இதோ உங்களுக்காக டிப்ஸ்.!

nathan

ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை சில உறுப்புகளின் அமைப்பை வைத்தே நம்மால் கண்டறிய இயலும்

nathan