ஆரோக்கிய உணவு சாலட் வகைகள்

வெயிலுக்கு குளுமை தரும் ஃப்ரூட்ஸ் சாட்

 

வெயிலுக்கு குளுமை தரும் ஃப்ரூட்ஸ் சாட் தேவையான பொருட்கள் :

மாதுளம் பழம் – 1
கொய்யா – 1
ஆப்பிள் – 1
வெள்ளரி – 1
கேரட் – 1
கமலா ஆரஞ்சு  – 1
தக்காளி  – 2
எலுமிச்சைப் பழம் – அரை மூடி
தேன் – 1 டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன்
சாட் மசாலா – அரை டீஸ்பூன்

செய்முறை :

• மாதுளையை முத்துகளாக உதிர்த்துக் கொள்ளவும்.

• ஆரஞ்சு சுளைகளில் விதை நீக்கித் தனியே வைக்கவும்.

• மற்ற பழங்கள், காய்கறிகளை சிறிய துண்டுகளாக வெட்டவும்.

• எலுமிச்சைச்சாறு, ஆலிவ் ஆயில், தேன் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு ஸ்பூனால் நன்கு அடித்துத் தனியே வைக்கவும்.

• நறுக்கிய பழங்கள், காய்கறிகளை ஒன்றாகச் சேர்க்கவும்.

• அதில் எலுமிச்சை-தேன்-ஆலிவ் ஆயில் கலவையை கலந்து மேலே சாட் மசாலா தூவி பரிமாறவும்.

• வெயிலுக்கு இதம் தரும் ஃப்ரூட்ஸ் சாட் ரெடி.

Related posts

மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ் !

nathan

விந்தைகள் செய்யும் விதைகள்!

nathan

உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் சர்க்கரை

nathan