உடல் பயிற்சிதொப்பை குறைய

கீழ் வயிற்று தசைப்பகுதியை குறைக்கும் பயிற்சி

 

கீழ் வயிற்று தசைப்பகுதியை குறைக்கும் பயிற்சி உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உடற்பயிற்சிக்குதான் முதல் இடம். உடற்பயிற்சி செய்யும்போது எந்தவிதக் கவனச்சிதறலும் இல்லாமல், புரிதலோடும் அக்கறையோடும் செய்தால்தான், அதன் பலன் முழுமையாகக் கிட்டும். எந்தப் பயிற்சியாக இருந்தாலும் உடலின் நெகிழ்வுத்தன்மைக்கு வார்ம்அப் பயிற்சிகள் உதவியாக இருக்கும்.

பயிற்சி செய்வதற்கு முன்பு வார்ம்அப் (Warm up), ஸ்ட்ரெச்சிங் (Stretching) பயிற்சிகளையும்… பயிற்சி செய்த பின்பு கூல்டவுன் (Cool down),  ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் செய்யவேண்டும். இல்லை எனில், கை கால் தசைகளில் வலி, மூட்டுகளில் இறுக்கம், சோர்வு போன்ற தொந்தரவுகள் உண்டாகும்.

ஒவ்வொருவரின் உடல்வாகுக்கு ஏற்ப, பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்து செய்தால், நல்ல ஃபிட்டான உடல் அமைப்பைப் பெறமுடியும்.  கீழ் வயிற்று தசைப்பகுதியை குறைக்க இந்த பயிற்சி எதிர்பார்த்த பலனை தரும். இந்த பயிற்சி செய்ய விரிப்பில் கால்களை நீட்டிப் படுத்துக்கொள்ள வேண்டும். கைகள் இரண்டையும் ‘V’ வடிவத்தில் பின்புற இடுப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி, தொடைப்பகுதி வயிற்றின் மீது மெள்ள அழுந்துமாறு வைத்து, பிறகு மீண்டும் கால்களை நன்கு மேல் நோக்கி நீட்ட வேண்டும். இவ்வாறு 20 முதல் 30 முறை செய்ய வேண்டும்.

Related posts

தொப்பை மற்றும் உடல் பருமனைக் குறைக்க உதவும் சில எளிய ஆயுர்வேத வழிகள்!!!

nathan

தொப்பையை குறைக்க உதவும் இந்திய மாற்று உணவுகள்!!!

nathan

முதியவர்களுக்கும் உடற்பயிற்சி தேவை

nathan

போசு பால் புஷ் அப்ஸ் பயிற்சி

nathan

தொப்பையை குறைக்க இலகுவான ரஸ்யன் ருவிஸ்ற் பயிற்சி

nathan

உடல் ஆரோக்கியத்தை காக்க உடற்பயிற்சி அவசியம்

nathan

எளிய முறையில் தியானப் பயிற்சி செய்வது எப்படி

nathan

தொப்பையா? கவலையே வேண்டாம் தினமும் இதை செய்யுங்க…..

sangika

தொப்பையை குறைத்து சிக்கென்ற வயிற்றை பெற பெண்களுக்கு ஆலோசனை

nathan