​பொதுவானவை

குழந்தை பாலியல் கொடுமையைத் தடுக்க பள்ளிகள் என்ன செய்யலாம்

குழந்தை பாலியல் கொடுமையைத் தடுக்க பள்ளிகள் என்ன செய்யலாம்
குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக நடந்துக் கொள்ளும் வழிமுறைகளை பயனுள்ள வகையில் கற்றுக்கொடுக்கவும் அந்தப் பயிற்சி ஒரே சமயத்தில் பல குழந்தைகளைச் சென்றடையவும் வேறெந்த அமைப்பையும் விட, ஏன் பெற்றோரைவிடவும் கூட, அதிக ஆற்றலுடையவை பள்ளிகள் என்பதால் குழந்தைகளைப் பேணிக் காக்கும் பணியில் அவை முன்னிலை வகிக்கின்றன.ஏனெனில், ஒரு குழந்தையின் விழித்திருக்கும் நேரத்தில் பெரும்பகுதி பள்ளியில்தான் கழிகிறது. அது மட்டுமின்றி குழந்தையின் நடவடிக்கையையும் குறிப்பிட்ட காலகட்டத்தில் உடற்கூறில் ஏற்படும் மாற்றத்தையும் அருகிலிருந்து கண்டுணரும் வாய்ப்பு, அறிவு, ஆற்றல் மற்றும் பயிற்சியைப் பெற்றிருப்பதால், குழந்தை பாலியல் கொடுமைக்கு எதிரான போரில் பள்ளியில் பணிபுரியும் நீங்கள் சிறப்புப் பங்கு வகிக்கிறீர்கள்.மேலும், குழந்தைகளுடன் தினமும் நெருங்கிப் பழகுவதால் உதவியும் பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகளை எளிதில் அடையாளம் கண்டு கொண்டு, அவர்களைக் கூர்ந்து கவனிக்கக்கூடிய அரிய வாய்ப்பையும் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். குழந்தைகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பை பெற்ற ஆசிரியர்கள் உரிய சோதனைக்கும் பயிற்சிக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

குழந்தை பாலியல் கொடுமையைப் பற்றி தெரிவிக்கவும் அது போன்ற நடத்தைகளைக் குழந்தைகள் தெரிவிக்கும் போது அதைப் பக்குவமாகச் சமாளிக்கவும் ஒரு வலுவான வழிமுறையை உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளியில் கணிணிகளைப் பயன்படுத்தும் முறையை நெறிப்படுத்த பொருத்தமான உடன்பாடு ஒன்றை நடைமுறைப்படுத்தி அது சரியான முறையில் நடந்து வருகிறதா என்பதை அறிய அவ்வப்போது சோதனை மேற்கொள்ளுதல் அவசியம்.

கணிணிகளைப் பயன்படுத்த மாணவர்களும் ஆசிரியர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளியின் சுற்றுப்புறவடிவமைப்பைக் கணித்து அதை மாணவர்களுக்குப் பாதுகாப்பான ஒரு சூழலாக மாற்றத் தேவையான முயற்சிகளைச் செய்தல் அவசியம்.

பள்ளிக்கு வருகைபுரியும் அனைவரும் பள்ளி அலுவலகத்தில் தகுந்த முறையில் சோதனைக்கு உட்படுத்தப்படவும் சந்தேகத்திற்குள்ளாகும் விருந்தினர்களையும் வழக்கத்திற்கு மாறான சம்பவங்களையும் திறம்படக் கையாளும் வகையில் பள்ளி வளாகத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

பள்ளியிலும் வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்றுவரும் வழியிலும் குழந்தைகள் பாதுகாப்பு வழிமுறைகளைச் சிறப்பாகக் கையாளச் சொல்லித் தரவும் அதில் பங்கேற்கவும் பெற்றோருக்குச் சிறப்புத் திட்டங்களை வழங்க வேண்டும். ஒப்புக் கொள்ளப்பட்ட கல்விக் கோட்பாடு, குழந்தையின் வயது, கல்வி மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில் பாதுகாப்புத் திட்டங்களை வடிவமைக்கவோ தேர்ந்தெடுக்கவோ செய்யுங்கள்.

குழந்தை எந்தவிதமான சூழ்நிலையையும் கையாளவும் தன்னைப் பாதுகாத்து கொள்ளத் தேவையான தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் உதவும் வகையில் கருத்துக்ளை வழங்குமாறு இவை வடிவமைக்கப்பட வேண்டும். பல வருடங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு பலனை வழங்கிய பலவிதத் திட்டக்கூறுகளையும் அடிப்படையாகக் கொண்டு இவை அமைக்கப்பட வேண்டும்.

குழந்தைகளின் ஆக்கபூர்வமான முழுப்பங்கேற்பையும் வெளிக் கொணரும் திறமையும் பயிற்சியும் பெற்றவர்களால் இந்தத் திட்டங்கள் வழங்கப்படுவது நன்மை பயக்கும்.

Related posts

வெந்தயக் கீரை ரசம்

nathan

கம்பு வெஜிடபிள் கஞ்சி

nathan

மாம்பழ பிரஞ்சு டோஸ்ட் சான்விச்

nathan

சூப்பரான கருணைக்கிழங்கு சில்லி ப்ரை..!!

nathan

பைனாப்பிள் ரசம்

nathan

சீனி சம்பல்

nathan

கம்பு வெஜிடபிள் கஞ்சி….

nathan

பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள்

nathan

சத்தான சுவையான பனிவரகு கஞ்சி

nathan