மருத்துவ குறிப்பு

இதோ அற்புதமான எளிய தீர்வு! ஒரே வாரத்தில் பற்களின் பின் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறையைப் போக்கும் அற்புத வழி!

ஒருவரது அழகு புன்னகையிலும் உள்ளது. ஒருவர் சிரித்த முகத்துடன் இருந்தால், அதுவே ஒருவரை மிகவும் அழகாக வெளிக்காட்டும். அதற்கு நம் பற்கள் நன்கு வெள்ளையாக, துர்நாற்றமின்றி இருக்க வேண்டும். ஆனால் இன்று பலர் தங்களது வாயில் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதில் சொத்தைப் பற்கள், வாய் துர்நாற்றம், மஞ்சள் கறையுடனான பற்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் பற்களைத் துலக்க வேண்டும். இருப்பினும் பற்களைத் துலக்குவதால் மட்டும், பற்களில் படிந்துள்ள மஞ்சள் களைகளைப் போக்க முடியாது. எனவே பலர் தங்களது பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க பல் மருத்துவரை சந்திக்கின்றனர்.

ஆனால் பல் மருத்துவரிடம் செல்லாமல், வீட்டிலேயே ஓர் எளிய வழியின் மூலம் பற்களின் பின் இருக்கும் மஞ்சள் கறைகளைப் போக்க முடியும் என்பது தெரியுமா? இந்த கட்டுரையில் அந்த வழி குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் பார்ப்போம்…

தேவையான பொருட்கள்:
* பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

* டூத் பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்

* ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்

* தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* அலுமினியத்தாள்

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா ஒரு ஆன்டி-பாக்டீரியல் பொருள். இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்துவிடும். பேக்கிங் சோடா பற்களை வெள்ளையாக்கும் மற்றும் வாயில் pH அளவைப் சீராக்கும். பேக்கிங் சோடா அலர்ஜியை ஏற்படுத்தினால், அந்த பொருளைத் தவிர்த்திடுங்கள். பேக்கிங் சோடா பயன்படுத்த விரும்பாதவர்கள், அதற்கு பதிலாக எலுமிச்சை சாற்றினை பயன்படுத்தலாம்.
tooth plaque
எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு
இந்த முறையில் பயன்படுத்தப்படும் எலுமிச்சை சாறு ப்ளீச்சிங் போன்று செயல்படும். மேலும் இதில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளதால், வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து, பற்களை வெண்மையாகவும், வாயை துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளும்.

ஆப்பிள் சீடர் வினிகர்
இந்த முறை சக்தி வாய்ந்ததாக இருப்பதற்கு மற்றொரு காரணமே ஆப்பிள் சீடர் வினிகர் தான். இதில் உள்ள அமிலத்தன்மை, பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளை எளிதில் அகற்ற உதவும். ஆனால் இதை ஒரு டேபிள் ஸ்பூனுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் பற்களுக்கு மிகவும் சிறப்பான பொருள். இது பல் சொத்தையாவதைத் தடுக்கும் மற்றும் ஈறுகளுக்கு ஊட்டமளித்து, ஈறுகள் வீங்குவதைக் குறைக்க உதவும். அதற்கு தேங்காய் எண்ணெயை இந்த முறையில் பயன்படுத்துவது மட்டுமின்றி, தனியாக இந்த எண்ணெயைக் கொண்டு ஆயில் புல்லிங் கூட செய்யலாம். இதனால் ஈறுகள் மென்மையாவதோடு, வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் குணமாகும். ஒருவேளை தேங்காய் எண்ணெய் பயன்படுத்த விரும்பாதவர்கள், கடுகு எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

டூத் பேஸ்ட்
இந்த முறையில் டூத் பேஸ்ட் பயன்படுத்துவதால், இது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கும். இந்த முறையில் டூத் பேஸ்ட் தான் ஒரு தளத்தைப் போல வேலை செய்கிறது. முக்கியமாக இந்த முறைக்கு வெள்ளை நிற டூத் பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள்.

செய்முறை:
* ஒரு பௌலில் பேக்கிங் சோடா மற்றும் டூத் பேஸ்ட் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* அடுத்து அந்த கலவையை இரண்டு துண்டு அலுமினியத் தாளின் மீது தடவ வேண்டும். பின் ஒரு துண்டை மேல் பற்களின் மீதும், மற்றொன்றை கீழ் பற்களின் மீதும் வைக்க வேண்டும்.

* 2 நிமிடம் கழித்து, அலுமினியத்தாளை நீக்கி, நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

* எஞ்சிய கலவையைக் கொண்டு, மீண்டும் பற்களை கை விரலால் துலக்கி, நீரால் வாயை கொப்பளியுங்கள். முக்கியமாக ஒருமுறை இந்த கலவையைத் தயாரித்தால், அப்போதே பயன்படுத்திவிட வேண்டும். மறுநாளைக்கு வைத்து பயன்படுத்தக்கூடாது.

குறிப்பு
பற்களின் பின் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்க உதவும் இந்த வழியை வாரத்திற்கு 2 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால், பற்களின் பின்னால் இருக்கும் மஞ்சள் கறைகள் காணாமல் போவதோடு, பற்கள் வெள்ளையாகவும், வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும். மேலும் இது இயற்கைப் பொருட்களைக் கொண்டு செய்யப்படுவதால், எந்த ஒரு பக்கவிளைவும் இருக்காது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button