வீட்டுக்குறிப்புக்கள்

8 ஆம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்! அப்படி என்ன ஸ்பெஷல்?

8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் காரர்கள் ஆவர். இவர்கள் சனி பகவானின் ஆதிக்கத்தில் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவர். இந்த 8ம் எண் ஒரு சிக்கலான எண்ணாகும். அதனால் இந்த எண்ணில் பிறந்தவர்களும் அதிகம் சிக்கலானவர்கள் ஆவர். இயற்கை விரும்பிகள். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் போராட்டம் இருக்கும்.

இவர்கள் அதிக சுதந்திர மனப் போக்கை கொண்டவர்கள். நேரத்திற்கு ஏற்றார் போல தங்களை இவர்கள் மாற்றிக் கொள்வார்கள். நீதிக்கும், நேர்மைக்கும் முக்கியத்துவம் தருவார்கள். வாழ்வில் என்ன சோதனை வந்தாலும் அலட்டிகொள்ளாமல் சமாளித்து வெற்றி பெறக் கூடியவர்கள். அமைதியாக இருபதையே விரும்புபவர்கள். உலக விஷயங்களை அறிந்தவர்கள். நல்ல கூர்மையான அறிவையும், அதற்கேற்ற செயல் திறனையும் பெற்றவர்கள்.

பிறர் தன் மேல் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடப்பார்கள். மற்றவர்கள் தங்களால் முடியாது என கைவிட்ட விஷயத்தையும் சவாலாக ஏற்று கொண்டு துணிச்சலுடன் அவற்றை முடித்து காட்டுவார்கள். மூட நம்பிக்கைகளை நம்ப மாட்டார்கள். அதனால் சில சமயங்களில் கடவுள் மறுப்பாளரான நாத்திகர்கள் போல இருப்பார்கள். சமயங்களில் இவர்கள் மற்றவர் பார்வைக்கு முரடர்கள் போலத் தெரிவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல.

செய்நன்றி மறக்காதவர்கள். தனக்கு நெருக்கமானவர்கள் மேல் கொண்ட அன்பிற்காக உயிரையும் கொடுக்க தயாராக இருப்பார்கள். சமுதாயத்தை சீர்திருத்தி நல்வழிபடுத்த கூடியவர்கள். துரோகம் செய்தவர்களை சமயம் சந்தர்ப்பம் பார்த்து பழி தீர்த்துக் கொள்வார்கள். மற்றவர்களிடம் பாகுபாடு பார்த்து பழக மாட்டார்கள். எதாவது ஒன்றை அடைய வேண்டும் என்று ஆசைபட்டால் அதை எப்படியாவது அடைந்து விடுவார்கள். மற்றவர்களை அதிகாரம் செய்யும் போக்கு இவர்களிடம் அதிகம் காணப்படும்.
eight

தனிமையை நேசிப்பார்கள். தனக்கு எதிராக எதாவது ஒன்று வந்து விட்டால் ஒரு கை பார்க்காமல் விட மாட்டார்கள். இவர்கள் எதைச் செய்தாலும் நிதானமாக செய்வார்கள். நல்ல கூர்மையான அறிவு நிறைந்தவர்கள். மற்றவர்களை எளிதில் நம்ப மாட்டார்கள். எந்த விஷயத்திலும் ஒரு பிடிப்பு இருக்காது. எதையும் துணிந்து செய்வார்கள். பணம், புகழ், செல்வம், சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும்.

இவர்களுக்கு தலைவலி, வாயுத் தொல்லைகள், சிறுகுடல், பெருங்குடல் கோளாறுகள், ரத்த அழுத்தம், வயிற்று வலி, தோல் சம்மந்தமான பிரச்சனைகள் இவர்களுக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button