மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! எலுமிச்சை மற்றும் உப்புடன் இந்த பொருளை மட்டும் சேர்த்து பாருங்க…!!

எலுமிச்சை மற்றும் மிளகு இயற்கையாகவே மருத்துவ குணங்கள் உள்ள பொருட்களில் ஒன்றாகும்.

இது உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்குகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே.

நமது அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் உப்பு இந்த இரண்டுடன் சேர்க்கும்போது அது உங்களின் ஆரோக்கியத்தில் பல அற்புதங்களை நிகழ்த்தும் என்று கருதப்படுகின்றது.

அந்தவகையில் எலுமிச்சை, மிளகு மற்றும் உப்பு இந்த மூன்றையும் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை தற்போது இங்கு பார்ப்போம்.

  • வயிற்றில் ஏற்படும் சிக்கல்களை குணப்படுத்த ஓர் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் மிளகு போதும். இது இரண்டையும் ஒரு டம்ளர் சுடுநீரில் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து குடித்தால் எப்படிப்பட்ட வயிற்று உபாதைகளும் உடனே சரியாகிவிடும்.
  • ஆஸ்துமா இருந்தால் கொதிக்கும் நீரில் இரண்டு கிராம்பு, 10 மிளகு மற்றும் சில துளசி தழைகளை போட்டு 15 நிமிடம் கொதிக்க வைக்கவும். இதனை வடிகட்டி தேன் கலந்து குடிக்கவும். இது இரண்டு வாரம் வரை உங்கள் பிரிட்ஜில் கெட்டு போகாமல் இருக்கும்.
  • அரை ஸ்பூன் கிராம்பு எண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் மிளகு தூள் இரண்டையும் சேர்த்து வலி இருக்கும் பல்லின் மீது பூசவும். இந்த கலவையில் உள்ள கிராம்பு எண்ணெய் பல் வலியை குறைப்பதுடன் ஈறுகளில் உள்ள வீக்கத்தை குணப்படுத்தும்.
  • சிறிய பஞ்சை எலுமிச்சை சாறில் மூழ்கி எடுத்து பயன்படுத்துவது மூக்கில் இரத்தம் வடிவதை குறைக்கும். இந்த பஞ்சை மூக்கில் இரத்தம் வரும் இடத்தில் வைத்து இரத்தகசிவு நிற்கும் வரை தலையை சாய்த்து வைத்திருந்தால் போதுமானது.
  • மெல்லியதாக வெட்டப்பட்ட இரண்டு எலுமிச்சை துண்டுகள் மற்றும் ஒரு ஆரஞ்சு துண்டை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் சிறிது இஞ்சி, சிறிது மஞ்சள் மற்றும் தேன் சேர்த்துக்கொள்ளவும். உங்களுக்கு எப்போதெல்லாம் உடல்நிலை சரியில்லாமல் போகிறதோ அப்போதெல்லாம் இந்த கலவையில் சிறிது எடுத்து நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கவும்.625.500.560.350.160.300.0 3
  • இயற்கையான முறையில் தும்மல் வர இலவங்கப்பட்டை, மிளகு, ஏலக்காய் மற்றும் சீரகம் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக்கொள்ளவும். இதனை நன்கு அரைத்து பொடியாக்கி கொள்ளவும். மூக்கடைப்பு ஏற்படும்போது இதன் வாசனையை சுவாசித்தால் மூக்கடைப்பு சரியாகும்.
  • மூன்று எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்துக்கொண்டு அதில் மிளகு மற்றும் உப்பு சேர்க்கவும். இதில் ஒரு ஸ்பூன் மற்றும் சூடான நீரை சேர்க்கவும். இந்த கலவையை கொண்டு தினமும் வாய் கொப்பளிக்கவும். இது விரைவில் நிவாரணம் வழங்கும் மேலும் இருமலை கட்டுப்படுத்தும்.
  • எலுமிச்சை சாறில் மிளகு தூள் மற்றும் தேன் சேர்த்து அதில் சூடான நீரை கலந்து தினமும் காலை சாப்பிடுவதற்கு முன் குடித்தால் விரைவில் உங்கள் எடை குறையும்.
  • உங்கள் வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை விரட்ட உப்பை சூடான நீரில் கலந்து நீங்கள் சாப்பிட்டபின் அந்த நீரில் வாய்கொப்பளிக்கவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button