ஆரோக்கிய உணவு

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை தரும் சிறப்பான உணவுகள்!!!

[ad_1]
Fiber Rich Diet For Constipation





இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். இந்த மலச்சிக்கல் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இதனை சமாளிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், எதையும் சரியாக சாப்பிட முடியாமல் அவஸ்தைப்படுவதுடன், வயிறு எப்போதும் அசௌகரியமாகவே வலியுடன் உப்புசமாகவே இருக்கும்.
எப்படி மலச்சிக்கல் பிரச்சனைக்கு உணவுப் பொருட்கள் காரணமோ, அதே உணவுப் பொருட்கள் தான் இதற்கு நிவாரணமும் அளிக்கும். அதிலும் நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள் தான் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வைத் தரும். அதுமட்டுமின்றி, தண்ணீர் அதிகம் குடிக்கவும் வேண்டும். இப்போது மலச்சிக்கல் பிரச்சனைக்கு உடனடி நிவாரணம் தரும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பீன்ஸ் 


பீன்ஸில் 10 கிராம் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆகவே இதனை வாரம் 2-3 முறை உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய நார்ச்சத்துக்கள் கிடைத்து, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.

பருப்பு வகைகள் 


பருப்பு வகைகள் கூட மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும். ஆகவே அன்றாடம் உணவில் பருப்பு வகைகளை சேர்த்து வந்தால், மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பட்டாணி 


பட்டாணி பலருக்கு விருப்பமான உணவுப்பொருளாக இருக்கும். அத்தகைய பட்டாணியை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு வந்தால், வயிற்றுப் போக்கு ஏற்படும். அதுவே அளவாக உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் ஏற்படாமல் செரிமானம் சீராக நடைபெறும்.

ப்ராக்கோலி 


காலிஃப்ளவர் போன்று பச்சையாக இருக்கும். ப்ராக்கோலியில் வைட்டமின் கே வளமாக நிறைந்துள்ளது. ஆகவே மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் ப்ராக்கோலியை உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கலாம்

அவகேடோ அவகேடோவில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. எனவே இதனை அவ்வப்போது கிடைக்கும் போது உட்கொண்டு வந்தால், மலச்சிக்கல் நீங்குவதோடு, உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளையும் தடுக்கலாம்.

பேரிக்காய் 


பேரிக்காயில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கலாம்.

உலர் பழங்கள் உலர் பழங்களான பேரிச்சம் பழம், உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை, உலர் ஆப்ரிகாட் போன்றவற்றில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. இவற்றை ஸ்நாக்ஸ் நேரங்களில் ஒரு கையளவு தினமும் உட்கொண்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் இருக்கும்.

ஓட்ஸ் 


ஓட்ஸ் கூட மலச்சிக்கலைத் தடுக்கும் சிறப்பான உணவுப் பொருட்களில் ஒன்று. இவற்றை உட்கொள்வதால் மலச்சிக்கல் நீங்குவதோடு, உடல் எடையும் குறையும்.

பசலைக்கீரை 


பசலைக்கீரையில் வைட்டமின் கே வளமாக நிறைந்துள்ளது. உங்களுக்கு மலப்புழையில் வலி இருந்தால், ஒரு பௌல் பசலைக்கீரையை உட்கொண்டு வாருங்கள். இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு, கழிவை வெளியேற்றும் போது ஏற்படும் வலியும் குணமாகும்.

வாழைப்பழம் 


வாழைப்பழத்தைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, தினமும் மூன்று வாழைப்பழத்தை உட்கொண்டு வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சியா விதைகள் 


சியா விதைகள் கூட மலச்சிக்கலுக்கு நல்ல நிவாரணம் தரும். அதற்கு அதனை ஊற பாலில் ஊற வைத்து, சர்க்கரை சேர்த்தோ அல்லது வேறு ஏதேனும் உணவுகளுடன் சேர்தோ உட்கொள்ளலாம்.

கேரட் 


கேரட்டை பச்சையாகவோ, வேக வைத்தோ சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் நீங்கும். அதுமட்டுமின்றி, அன்றாடம் கேரட்டை சாப்பிட்டு வந்தால், கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button