28.3 C
Chennai
Saturday, May 18, 2024
625.0.560.350.160.300.053.800.6

கொரோனா அச்சத்திற்கிடையே பஞ்சாங்கத்தில் இருந்த தகவல்! உலகிற்கு இந்த திகதியில் ஒரு நல்ல செய்தி வரும்!

கொரோனா வைரஸால் உலகின் பல்வேறு நாடுகள் முடங்கி போய் இருக்கும் நிலையில், தமிழ் பஞ்சாங்கத்தில் ஏப்ரலில் ஒரு குறிப்பிட்ட திகதில் உலகிற்கு நல்ல செய்தி கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது, மக்களிடையே ஒரு வித நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை 1,056,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 55,780 பேர் உயிரிழந்துள்ளனர். உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயாக கொரோனா இருப்பதால், பல்வேறு நாடுகள் இந்த நோயிடம் இருந்து தப்பிப்பதற்காக முடங்கியுள்ளன.

குறிப்பிட்ட சில நாடுகள் இந்த வைரஸிற்கான நோய் எதிர்ப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக கொரோனாவை எதிர்க்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதனால் மக்கள் இது எப்போது தான் முடிவுக்கு வரும், நாம் எப்போது சகஜமாக மற்றவர்களிடம் பேச முடியும், அனைத்து வேலைகளை செய்ய முடியும் என்ற வேதனையில் இருக்கின்றனர். ஒரு சில நாடுகள் மூன்று வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவுகளை போட்டுள்ளதால், மக்கள் வெளியில் வர முடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கின்றனர்.

இதன் காரணமாக ஒரு சிலர் மன அழுத்ததிற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில், மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஏப்ரல் 4-ஆம் திகதி((பங்குனி 22 சனிக்கிழமை, சர்வ ஏகாதசி – உலகிற்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கும்)) உலகிற்கு ஒரு நற்செய்தி கிடைக்கும் என்று விகாரி வருடத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 4-ஆம் திகதி பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை, ஏகாதசி திதி. இந்த நாள் சிறப்பான நாள், இந்த நல்ல நாளில் பெருமாளை நினைத்து வணங்கி பெருமாள் படத்திற்கு துளசி மாலை சாற்றி வணங்கலாம். சங்கடங்கள் தீரும்.

நோய் பயம் போகும். அதே நேரத்தில் உலகத்திற்கு கிடைக்கக் கூடிய நல்ல செய்தி கொரோனா பற்றிய அச்சத்தை போக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று பலரும் கடவுளை வேண்டி வருகின்றனர்.625.0.560.350.160.300.053.80

ஏப்ரல் 4-ஆம் திகதி நற்செய்தி கிடைக்கும் என்று கணித்துள்ள பஞ்சாங்கத்தில், ஏப்ரல் 5-ஆம் திகதி ராமேஸ்வரத்தில் ஒரு அதிசயம் நிகழும் என்று கணித்துள்ளது.

ஏப்ரல் 6ஆம் தேதி பங்குனி உத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்த நாள். ஆனால் கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்தால் முருகன் கோவில்களில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் 8 முதல் 12 வரை பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டுள்ளவைகள் பீதியை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கிறது. ராமநாதபுரத்தில் மதக்கலவரம் வெடிக்கும் என்றும் முக்கிய நகரத்திற்கு ஆபத்து என்றும் கணித்துள்ளது.

அதே போல குற்றால அருவியில் அதிசய நிகழ்வு இருக்கும். அயல்நாடுகளில் பூகம்பம் ஏற்படும் என்றும் கணித்துள்ளது. வட மாநிலங்களில் குறிப்பாக உத்திரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் கலவரம் வெடிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மழை, வெள்ளம், புயல் பற்றியும் வைரஸ் தாக்குதல், வெட்டுக்கிளி தாக்குதல் பற்றியும் பஞ்சாங்கம் கணித்தது பலித்துள்ளதால், இப்போது உலகத்திற்கு நல்ல செய்தி கிடைக்கும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளதும் பலிக்க வேண்டும் என்பதே மக்களின் பிராத்தனையாக உள்ளது.625.0.560.350.160.300.053.800.6