​பொதுவானவை

பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள்

 

பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயது மூதாட்டிகள் வரை பல்வேறு வகையில் பாலியல் வன்முறைக்கு ஆளாகிற கொடூரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பள்ளிக் கூடமோ, பணிபுரியும் அலுவலகமோ எந்த இடமாக இருந்தாலும் பெண்கள் இன்று தங்களை எல்லா விதத்திலும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

பெண்கள் ஏதாவது ஆபத்தில் மாட்டிக்கொண்டால் அவர்களுக்கு உதவுவதற்காகத் தொழில்நுட்பம் கைகொடுக்கத் தயாராக இருக்கிறது. பெண்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘ஆப்ஸ்’ எனப்படும் அப்ளிகேஷன்ஸ் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

ஐ யம் சேஃப் ( I AM SAFE ) :

பயண இடங்களைக் கண்காணித்து, பாதுகாப்புக்கு வழி செய்யும் ஒரு இலவச மென்பொருள் இது. கூகுளால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மென்பொருள், பெண்கள் கடந்து வரக்கூடிய எல்லா இடங்களையும் ஜி.பி.எஸ் மூலம் கண்டறிந்து, ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்புகிறது.

ஜி.பி.எஸ், வைஃபை (WIFI) :

வசதியும் கொண்ட இந்த அப்ளிகேஷன், அடிக்கடி நாம் செல்கிற இடத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் சொல்வது, குடும்ப உறுப்பினர்கள் வெளியே புறப்படும்போதும் வீட்டுக்குத் திரும்பி வந்த உடனேயும் மெசேஜ் தருவது, பாலியல் குற்றவாளிகள் பற்றிய விபரங்கள், நாம் குடியிருக்கும் இருப்பிடத்தின் அருகில் நடந்த பாலியல் குற்றங்கள் போன்ற தகவல்களையும் தருகிறது.

பாதுகாப்பு விஷயத்திலும் இது சிறந்தது. அபாயத்திலிருக்கும் ஒருவர் பேனிக் பட்டனை அழுத்தினால், தகவல் குறுஞ்செய்தியாகவும், ஈ-மெயில் மூலமாகவும், செய்தி சென்று சேர்பவரிடம் அந்த ஆப் இருக்கும் பட்சத்தில் நோட்டிஃபிகேஷன் மூலமாகவும் செல்கிறது.

சர்க்கிள் ஆஃப் 6 (Circle of 6 ) :

இதன் மூலம் வெளியே செல்லும் பெண்கள் வீட்டு நபர்கள், நம்பத்தகுந்த நண்பர்கள், காவல்துறை என்று அவரவர் விருப்பத்துக்கேற்ப 6 பேரின் எண்களை இந்த சர்க்கிளில் வைத்துக்கொள்ளலாம். ஆபத்து ஏற்படும் நிலையில் இது ஜி.பி.எஸ். மூலம் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து முன்னரே பதிவு செய்து வைக்கப்பட்டு இருக்கும் செய்தியை 6 எண்களுக்கும் அனுப்பி சிக்னல் கொடுத்துவிடும்.

எஸ்.ஓ.எஸ் விசில் (SOS Whistle) :

இது ஆபத்துக் காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய உத்தியின் மேம்பட்ட வடிவம். விசில் சத்தத்தின் மூலம் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பது. இந்த ஆப் எவ்விதமான எச்சரிக்கை செய்தியையோ, அழைப்பையோ அனுப்பாமல் விசில் சத்தத்தை மட்டும் எழுப்புகிறது. போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் ஒலியை எழுப்பும் இந்த அப்ளிகேஷனுக்கு இணையமோ, ஜி.பி.எஸ். சேவையோ தேவையில்லை என்பது கூடுதல் வசதி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button