32.5 C
Chennai
Wednesday, May 29, 2024
hj

பிறக்கும் தமிழ் புத்தாண்டில் மகர ராசிக்கு காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்!

சார்வரி தமிழ் வருடம் பிறக்கும் போது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

சனி பகவான் மகரம் ராசியில் ஆட்சி பெற்றிருக்கிறார். குருவும் அதிசாரமாக சென்றாலும் பின்னர் தனுசு ராசியில் ஆட்சி பெற்று அமர்கிறார். ஆவணியில் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிஷபம் ராசிக்கும் கேது பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகிறார்.

புத்தாண்டு தொடங்கும் போது மகரம் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சந்திரன், கேது, உங்க ராசிக்குள் குரு, சனி, செவ்வாய், மூன்றாம் வீட்டில் புதன் நான்காம் வீட்டில் சூரியன் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார்.

ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் ஆறாம் வீட்டில் ராகு என கிகரகங்கள் சஞ்சாரம் உள்ளது.

மகர ராசி
உங்க வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை தரப்போகிற ஆண்டாக சார்வரி தமிழ் புத்தாண்டு அமைந்துள்ளது. திடீர் திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.

உங்க ராசி அதிபதி சனி பகவான் இந்த ஆண்டு திருக்கணித பஞ்சாங்கப்படி உங்க ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார்.

உங்களுக்கு ஜென்ம சனி காலம் என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. பெரிய முதலீடுகள் வேண்டாம், இப்போது இருக்கிற சூழ்நிலையில் நீங்க எதையும் யோசிக்காம முடிவெடுக்காதீங்க.

சனி பகவான் உங்க ராசி அதிபதி என்பதால் அதிக அளவில் கெடு பலன்கள் எதுவும் ஏற்படாது தைரியமாக இருக்கலாம். வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம் கவனம், குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டியிருக்கும் கவனம்.

குரு பகவான் வருட ஆரம்பத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் போது உங்களுக்கு பணவரவு இருந்தாலும் குரு பகவான் வக்ரமடைந்து தனுசு ராசிக்கு திரும்பி விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பணம் விரையம் ஏற்படும்.

நீங்க செய்யும் புதிய தொழில் முதலீடுகளை உங்க மனைவி பேரில் செய்வது லாபம் தரும். இந்த ஆண்டு உங்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். வேலையில் நெருக்கடிகள் இருந்தாலும் அதை எளிதில் சமாளிப்பீர்கள்.

hj

பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவது போல தோன்றினாலும் உங்களுக்கு பணவரவும் தாராளமாக இருக்கும் என்பதால் செலவுகளை சமாளிப்பீர்கள். கடன் சுமை குறையும்.

கணவன் மனைவி ஒற்றுமை
உங்க குடும்பம் குதூகலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கின்றன.

ஆவணி மாதம் வரை விரைய ஸ்தானத்தில் இருக்கும் கேது பின்னர் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதே போல ஆறாம் வீட்டில் உள்ள ராகு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

சிலருக்கு இடமாற்றத்துடன் சம்பள உயர்வும் கிடைக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைத்தாலும் வேலைப்பளு அதிகரிக்கும். வதந்திகளை நம்பாதீங்க. எதையும் தீர விசாரித்து முடிவு பண்ணுங்க.

சுப காரியங்கள்
இந்த ஆண்டு உங்க குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். குருவின் பார்வை உங்க ராசிக்கு ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு, ஒன்பதாம் வீடுகளின் மீது விழுவதால் நிறைய நன்மைகள் நடைபெறும். திருமணம் கைகூடி வரும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆண்டு இறுதியில் வெளிநாடு செல்லும் யோகம் கை கூடி வரும். உயர்கல்விக்காக மாணவர்கள் வெளியூர் பயணம் செல்வீர்கள் பிடித்த கல்லூரிகளில் உயர்கல்வி படிப்பீர்கள். இன்ஜினியரிங் படிக்க யோகம் கூடி வரும

எதிர்ப்புகள் குறையும்
மறைமுக எதிர்ப்புகள் குறையும். உங்க பேச்சிற்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

பிள்ளைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். குழந்தைகளுக்கு கல்வி செலவுகள் தேடி வரும்.

திட்டமிட்டு செலவு செய்யுங்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும்.

ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களுக்கு நல்ல லாபம் வரும். வீடு வாகனம் வாங்கும் யோகம் வரும். கட்டிய வீடு பழைய வீடுகளை வாங்குங்கள். செவ்வாய்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்குங்கள் தடைகள் நீங்கும் நன்மைகள் நடைபெறும்.