30.5 C
Chennai
Friday, May 17, 2024
health

சூப்பரான தீர்வு..!! 5 நிமிடத்தில் குதிகால் வலி குணமாக “பேய்குமட்டி ”

குமட்டிக்காய் அல்லது குமிட்டிகாய் எனப்படும் இது ஒரு படர்கொடி தாவரம் ஆகும். இதை ஆற்றுத்தும்மட்டி, கொம்மட்டி, வரித்தும்மம், பேய்குமட்டி என்ற வேறு பெயர் கொண்டும் அழைப்பர். இவை களைகளாய் விளைநிலங்களில் இருக்க கூடியவை. இதன் தாயகம் மெடட்ரேனியன் மற்றும் ஆசியா ஆகும். ஆப்பிரிக்கா, இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் இது அதிகமாக உள்ளது. தமிழகமெங்கும் மணற்பாங்கான இடங்களில் இது வளர கூடியது. மிகவும் வெட்டப்பட்ட இலைகளையுடைய தரையோடு வேர்விட்டுப் படரும் கொடி இந்த பேய்கும்மட்டி.

இதன் காய்கள் மிகுந்த கசப்பு சுவை கொண்டது. இது பச்சை, வெள்ளை வரிகளையுடைய காய்களாகும். இதன் காய்கள் சிறிய பந்து போல் இருக்க கூடியது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை வண்ணத்திலும் இது இருக்கும். இதில் அமிலத்தன்மை அதிகம் உள்ளன. இதன் விதைகள் மூலம் இது இனப்பெருக்கம் செய்கிறது.

health

சித்த மருத்துவத்திலும், வேளாண்மையில் தாவர பூச்சிவிரட்டியாக இந்த குமட்டிக்காய் பயன்படுகின்றது. இதன் இலை, காய், வேர் ஆகிய அனைத்தும் மருத்துவப் பயனுடையவை.

புழுவெட்டினால் மயிர் கொட்டும் இடங்களில் காயை நறுக்கி தேய்த்து வரப் புழு வெட்டு நீங்கும் என்பது இதன் சிறப்பு.மேலும் இது குதிகால் வலியையும் குணப்படுத்தும்.

hea

செய்முறை:

  • முதலில் இந்த குமட்டிக்காயை எடுத்து அடுப்பில் போட்டு நன்றாக சூடு செய்ய வேண்டும்.
  • பின்னர் அதனை எடுத்து ஒரு தேங்காய் தொட்டியில் போட்டு நன்றாக கால் பொறுக்கும் சூட்டில் வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  • இதில் உள்ள சாரு கால்களில் பட்டு வலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • இவ்வாறு செய்து வர இந்த குமட்டிக்காய் குதிகால் வலியை குணமாகும்.