ரொட்டியும் தேங்காய் சம்பலும்

1-71

 • ரொட்டிக்கு:
 • கோதுமை மாவு – ஒரு கப்
 • மைதா மாவு – ஒரு கப்
 • பொடியாக நறுக்கிய கோஸ் – ஒரு கப்
 • தேங்காய் துருவல் – அரை கப்
 • வெங்காயம் – ஒன்று
 • பச்சை மிளகாய் – 2
 • கறிவேப்பிலை – சிறிதளவு
 • கடுகு – கால் தேக்கரண்டி
 • எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
 • உப்பு – தேவையான அளவு
 • சம்பலுக்கு:
 • துருவிய தேங்காய் – ஒரு கப்
 • வெங்காயம் – ஒன்று
 • தக்காளி – ஒன்று
 • பச்சை மிளகாய் – ஒன்று
 • தனி மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
 • மாசித்தூள் – ஒரு மேசைக்கரண்டி (விரும்பினால்)
 • எலுமிச்சை சாறு – புளிப்பிற்கேற்ப
 • உப்பு – தேவையான அளவு

ரொட்டி மற்றும் சம்பலுக்கு தேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கோஸ் சேர்த்து வதக்கவும்.

பவுலில் மைதாவுடன் கோதுமை மாவு, வதக்கிய கோஸ், தேங்காய் துருவல் மற்றும் உப்புச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

பிறகு மாவை சப்பாத்திக்கு உருட்டும் அளவைவிட சற்று பெரிய உருண்டைகளாக உருட்டி மொத்தமான சிறிய ரொட்டிகளாக கையால் தட்டிக் கொள்ளவும்.

தட்டிய ரொட்டிகளை எண்ணெய் தடவிய தவாவில் போட்டு சுட்டெடுக்கவும்.

சம்பல் செய்யக் கொடுத்துள்ளவற்றை ஒன்றாகக் கலந்து பிசைந்து சம்பலைத் தயார் செய்து கொள்ளவும்.

சுவையான கோஸ் ரொட்டியை தேங்காய் சம்பலுடன் பரிமாறவும்.

Leave a Reply