அசைவ வகைகள்

சமையல் குறிப்பு: பொரித்த மீன்! ~ பெட்டகம்

[ad_1]

வீட்டு சாப்பாடு – 10
கடலிலிருந்து கொஞ்சம் மலையிலிருந்து கொஞ்சம்…

ச.தமிழ்ச்செல்வன்
எழுத்தாளர்

p20a%281%29

சமையல் குறிப்பு: பொரித்த மீன்

ணல்மகுடி
நாடகக்குழுவை நடத்திவரும் நாடகக்காரரான என் கடைசி தம்பி முருகபூபதியும்
அவனுடைய துணைவி மலைச்செல்வியும் சேர்ந்து மீன் வகைகள் சமைக்கும் காட்சி
அற்புதமானது. அவர்களிடம் கற்றுக்கொண்ட பாணியில்தான், நான் இப்போது மீன்
பொரிக்கிறேன்.

p20f

எந்த மீனையும் பொரிக்கலாம், குழம்புவைக்கலாம் என்றாலும், குழம்புக்காகவே
பிறந்த மீன் வகைகளும், பொரிப்பதற்கான மீன்வகைகளும் உண்டு. நன்கு
விசாரித்து பொரிக்கிற மீனை வாங்கி, அங்கேயே தோல், செதிள் எல்லாம் நீக்கிச்
சுத்தம்செய்து, முடிந்தால் பொரிக்கத் தோதான வட்ட வட்டத் துண்டுகளாக
நறுக்கியே வாங்கிவர வேண்டும்.

முதலில், மீனை நன்றாகக் கழுவி எடுத்து,
அகலமான தட்டில் பரத்தி, அதன் மீது, எலுமிச்சைப் பழச் சாற்றைப் பிழிந்துவிட
வேண்டும். மீண்டும், ஒருமுறை கழுவிஎடுத்து, அதே தட்டில் வைக்க வேண்டும்.

ஒரு அகலமான கிண்ணத்தில், உப்புத் தூள், மிளகாய்ப் பொடி, ஒரு துளி மஞ்சள்
தூள் போட்டு, நீர் சேர்த்து, கெட்டியானக் கரைசலாக எடுத்துகொள்ள வேண்டும்.

கழுவிய மீன் துண்டங்களை, இந்தக்கரைசலில் புரட்டி எடுத்து, மீண்டும் அதே
தட்டில் வரிசையாக அடுக்க வேண்டும். அப்படியே அந்தத்தட்டைத் தூக்கி,
வெயிலில் வைக்க வேண்டும். காலை பத்து மணிக்கு வெயிலில் வைத்தால், மதியம்
ஒரு மணிக்கு எடுத்துப் பொரிக்கலாம்.

இடையில், அந்த மீன் துண்டுகளைத்
தோசையைப் புரட்டிப் போடுவது போல, ஈரமான பக்கத்திலும் வெயில் படும்படி
புரட்டிப் போட வேண்டும். காக்கா தூக்காமல் காவலும் செய்ய வேண்டும். மிதமான
சூட்டில், வாணலியில் பொறுமையாகப் போட்டுப் போட்டு எடுத்தால் பொரித்த மீன்
தயார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button