அழகு குறிப்புகள்

மங்காத அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்! ~ பெட்டகம்

[ad_1]
மங்காத அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்!

பி. கே. ரமேஷ்
சித்த மருத்துவர் 

p19c%281%29விரலி
மஞ்சள், கரி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன. தோலில்
வெப்பத்தை உண்டாக்கி, கிருமிகளை அகற்றும் என்பதால், தோல் சம்பந்தப்பட்ட
பல்வேறு பிரச்னைகளுக்கு, கஸ்தூரி மஞ்சள் சிறந்த நிவாரணி. மார்க்கெட்டில்
இருக்கும் பல்வேறு கிரீம்களும் கஸ்தூரி மஞ்சள் சேர்க்கப்பட்டவைதான். வெறும்
அழகு சாதனப் பொருளாக மட்டுமின்றி, அஜீரணத்துக்கு மருந்தாகவும் மஞ்சள்
பயன்படுகிறது.

p19a

1431828977 Red Dotகஸ்தூரி
மஞ்சளை தினமும் குளிக்கும்போது பூசி வந்தால், பெரும்புண்கள், கரப்பான்
போன்றவை குணம் ஆகும். சோர்வாக இருப்பவர்களை, இதன் நறுமணம் உற்சாகமாக
உணரவைக்கும்.
1431828977 Red Dot50
கிராம் கஸ்தூரி மஞ்சள் பொடியை, ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய்
எண்ணெயில் போட்டு, காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அடிபட்ட
புண்களில் இந்த எண்ணெயைத் தடவிவர, சிறந்த கிருமிநாசினியாகச் செயல்பட்டு,
ஆறாத காயங்கள், பித்தவெடிப்பு, சொறி, சிரங்கைக் குணம் ஆக்கும். வலி
நிவாரணியாகவும் செயல்படும்.
1431828977 Red Dotகஸ்தூரி மஞ்சள் பொடியை, தண்ணீரில் கலந்து குடித்தால், வயிற்று வலி தீரும்.
1431828977 Red Dotபாலில் கலந்து குடிக்க, ‘பிராங்கைட்டிஸ்’ என்னும், நுரையீரல் தொற்று மற்றும் இருமலை குணப்படுத்தும். பசியை உண்டாக்கும்.
1431828977 Red Dotகஸ்தூரி மஞ்சள் பொடியை, வெந்நீரில் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய, சில நிமிடங்களில் தலைவலி பறந்துபோகும்.

1431828977 p19b

1431828977 Red Dotமிளகு,
கடுக்காய் தோல், வேம்பு விதை, கஸ்தூரி மஞ்சள் கலந்து செய்யப்படும்,
‘பஞ்சகற்பம்’ என்ற குளியல் பொடியை வாங்கிப் பயன்படுத்தலாம். சரும பிரச்னை
ஏற்படாது.
1431828977 Red Dotகஸ்தூரி
மஞ்சளுடன் பாசிப்பயறு, கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு, ரோஜா இதழ்,
செண்பகப்பூ, வெட்டிவேர், விளா மரத்தின் வேர், சந்தனம் கலந்து, பொடி செய்து,
தினமும் தேய்த்துக் குளித்துவந்தால், தேமல், சொறி, சிரங்கு போன்ற தோல்
நோய்கள், வியர்வை நாற்றம், தேவையற்ற முடிகள் போன்றவை நீங்கும். தோல் மென்மை
ஆகும். முகப்பருக்கள், வியர்வைக் கட்டிகள் மறையும்.
1431828977 Red Dotகஸ்தூரி
மஞ்சள் பொடியை, வெங்காயச் சாற்றில் குழைத்து, கட்டிகள் மீது பூசினால்,
கட்டிகள் உடையும். கஸ்தூரி மஞ்சளை அரைத்து சூடுபடுத்தி, அடிபட்ட இடத்தில்
தடவினால், வீக்கமும் வலியும் குறையும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button